தாய்சேய் நலன்புரி நிலையங்கள் கல்முனை நட்பிட்டிமுனையில் திறந்துவைப்பு
கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை தாய்சேய் நலன்புரி நிலையங்கள் திறப்பு விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்த இரு நிகழ்வுகளுக்கும் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொணடார்.
சுமார் 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான நபார்,பரகத்,சமீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment