நற்பிட்டிமுனை தார் இப்னு மஸ் ஊத் அஹதியா பாட சாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா
நற்பிட்டிமுனை தார் இப்னு மஸ் ஊத் அஹதியா பாட சாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்று கிழமை (29 ) நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயத்தில் கல்லூரி பணிப்பாளர் மௌளவில் ஏ.எல்.நாசீர் கனி தலைமையில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீரா சாஹிப் பிரதம அதிதியாகவும் மாநகர சபை உறுப்பினர்களான நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த எம்.எல் .சாலிதீன் ,ஏ.எச்.எச்.எம்.நபார் ,அம்பாறை மாவட்ட அஹதியா பாட சாலை சம்மேளன தலைவர் எம்.ஐ.பைசால் மற்றும் ஞான தாரகை எம்.ஐ.இப்ராஹீம் வைத்தியர் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
மாணவ ,மாணவிகளின் திறன்கள் இங்கு அரபு,தமிழ், ஆங்கில மொழிகளில் வெளிக்காட்டப் பட்டதுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாநகர முதல்வர் பொன்னாடை போத்தி கௌரவிக்கப் பட்டார்.
Comments
Post a Comment