Posts

Showing posts from May, 2012

கல்முனை மாநகர சபை நடாத்திய சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விழா

Image
கல்முனை மாநகர   சபை   நடாத்திய சாதனையாளர்களைக்   கௌரவிக்கும் விழாவான  " மாநகரமுத்துக்கள்  - 2012"  நேற்று   வெள்ளிக்கிழமை மாலை 25.05.2012 ல்   சாய்ந்தமருது   கடற்கரை பூங்காவில்   இடம்பெற்றது . மாநகர   முதல்வர்   கலாநிதி   சிராஸ்   மீராசாஹிப்   தலைமையில்   இடம்பெற்ற இவ்விழாவிற்கு   பிரதமஅதிதியாக   நீதிஅமைச்சரும்   ஸ்ரீலங்கா   முஸ்லிம் காங்கிரஸ்   தலைவருமான   ரவுப்   ஹகீம் ,  கௌரவ   அதிதிகளாக   கூட்டுறவு மற்றும்   உள்நாட்டுவர்த்தக   பிரதி   அமைச்சரும்   ஸ்ரீ . மு . கா .  தவிசாளருமான பஷீர்   சேகுதாவூத் ,  திகாமடுல்ல   பாராளுமன்ற   உறுப்பினரும்   ஸ்ரீ . மு . கா . செயலாளருமான   எம் . ரீ . ஹஸன்   அலி ,  திகாமடுல்ல   பாராளுமன்ற உறுப்பினர்   எச் . எம் . எம் . ஹரீஸ் ,  கிழக்குமாகாண   சபை   உறுப்பினர்கள் , மாநகர   சபை   உறுப்பினர்கள்   மற்றும்   மாநகர ...

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டி ஜூன் 5 இல்

Image
கிழக்கு மாகாண கல்வி வலயங்களுக்கிடையில் மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களின் மாணவர்கள் கலந்து கொள்ளும் இப் போட்டி நிகழ்ச்சி களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை பெரு விளையாட்டுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை மெய்வல்லுநர் போட்டிகள் திருமலை மெக்கெய்சர் விளையாட்டரங்கிலும் இடம்பெறவுள்ளது.

தம்புள்ளை பள்ளிவாசல் ஒரு போதும் அகற்றப்படாது என ஜனாதிபதி உறுதி: றிசாட்

Image
தம்புள்ளை பள்ளிவாசல் ஒரு போதும் அகற்றப்படமாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு உறுதிமொழி வழங்கியுள்ளார் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வந்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். இப்பள்ளிவாசலின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த இடத்திலேயே தொடர்ந்து இடம்பெறும் என அமைச்சர் றிசாட் தெரிவித்தார். குறித்த பள்ளிவாசலை தற்போதுள்ள இடத்திலிருந்து அகற்ற ஒருபோது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அனுமதிக்காது என அவர் மேலும் குறிப்பிட்டார். Views : 678   74   3   By A  Web Design

சரத் பொன்சேகா இன்று பிற்கபல் விதலை!

Image
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து  விடுதலை செய்யப்பட்டார். இவர்  இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் இராணுவத்தினருக்கான ஆயுத கொள்வனவில் மோசடி இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டில் 2010 பெப்ரவரி 8 ஆம் திகதி  கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு இராணுவ நீதிமன்றம் 30 மாத சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. அத்துடன் வெள்ளைக்கொடி வழக்கில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனையை வழங்கியது. இத்தீர்ப்புக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார். அதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி  கடந்த 18 ஆம் திகதி  கையெழுத்திட்டார்.  நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுருந்த அவர் நீதிமன்றம் சென்று  தனது மேன்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதன்பின் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இன்று பிற்கபல்  விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்பத...

தென்கிழக்கு பல்கலையில் விரைவில் பொறியியல் பீடம்; அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உறுதி!

Image
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் விரைவில் நிறுவப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை விரிவுரையாளர்கள் சிலர் எதிர்ப்பதானது அவர்களது மனநலக் குறைபாட்டின் வெளிப்பாடே என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைப் பூங்காவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவற்றைத் தெரிவித்தார். பல்கலைகலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் தலைமையில், பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், எஸ்.எஸ்.பி.மஜீத் மற்றும் ஏ.எம்.நௌசாத் உட்பட அரசியல் பிரமுகர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.ஏ.சத்தார் உட்பட பல்கலைக்கழக ...

வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா

Image
இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் சாந்தி சச்சிதானந்தம் தலைமை வகித்தார். பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் , கல்முனை மாநர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் , புரவலர் காசிம் உமர் , கவிஞர் ஜின்னாஹ் சரிபுதீன், கவிஞர் மேமன் கவி ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்முனை மாநர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கலாநிதி துரை மனோகரன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , அறிவிப்பாளர் புர்கான் பி இப்திகார் , இராஜேஸ்வரி சண்முகத்தின் மகன் அறிவிப்பாளர் சந்திரகாந்தன் சண்முகம் , கவிஞர் மேமன் கவி, எழுத்தாளர் சுல்பிகா சரீப் ஆகியோர் உரை நிகழ்த்தினர். கானக் குயிலுக்கு கவிதை குரல்கள் என்ற மகுடத்தில் கவியரங்கம் இடம் பெற்றது. தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற ...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

Image
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். குற்றச்சாட்டிக்குள்ளான உத்தியோகஸ்தரொருவர் பல வாரங்களின் பின் மீண்டும் கடமைக்கு திரும்பியமைக்கு எதிராகவே இப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றது. மேற்படி உத்தியோகஸ்தர் தொடர்பாக வைத்திய அத்தியட்சகர் சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததையடுத்து அவர் மீது நான்கு விசாரனைகள் நடாத்தப்பட்டு   முடிவுகள் எதுவும் வெளிவராத நிலையில் இன்று  அவர் கடமைக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்த போது வைத்தியசாலையின் ஊழியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், சிற்றுழியர்கள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர்கள் இணைந்து மேற்படி உத்தியோகத்தருக்கு எதிராக  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அனுமதி பத்திரமின்றி மணல் கொண்டு செல்லலாம்!

Image
புதிய நடைமுறை நேற்று முதல் அமுலுக்கு   - போக்குவரத்து அனுமதி  பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்லும் புதிய நடைமுறை உடன் அமுலுக்குக் கொண்டுவரப்படுவதாக  சுற்றாடல் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இதற்கமைய  மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப் பகுதிக்குள் மணல் ஏற்றிச்செல்ல முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார். மணல் அகழ்வு மற்றும் ஏற்றிச் செல்லுதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றும் போதே அமைச்சர் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை விடுத்தார். மணல் அகழ்வு மற்றும் ஏற்றிச் செல்லுதல் தொடர்பாக காலத்திற்கு காலம் மக்களின் நலனை கருத்திற் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளோம். பல்வேறு நிவாரணங்களை வழங்கி வந்துள்ளோம் என்றாலும் சந்தையில் மணல் விலை குறையாததை அடுத்து மணல் அகழ்வு தொடர்பான முரண்பாடுகளை குறைக்கவும்  விலையை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார். மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்து செய்தல் தொடர்பில் நிவாரணங்களை பெற்றுக...

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு நிகழ்வு

Image
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 19, 20 ஆம் திகதிகளில்  இடம்பெறவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த ஆறு பட்டமளிப்பு விழாக்களும் கொழும்பு நகரத்திலேயே நடத்தப்பட்டன. இம்முறை பட்டமளிப்பு விழாவை பல்கலை ஒலுவில் வளாக பூங்காவில் வெகு சிறப்பாக நடத்துவதற்கு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றோம் என்று தெரிவித்தார் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ,உயர் கல்வி பிரதி அமைச்சர் நந்தமித்திர ஏக்கநாயக்க அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ள பட்டமளிப்பு நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேரும் வெளிவாரி மாணவர்கள் 270 பேரும் பட்டங்களைப் பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர்

யானையின் பரிதாப மரணம்

Image
மட்டகளப்பு மாவட்டம் புனானை இராணுவ காவல் அரனுக்கு அருகாமையில் அமைத்துள்ள புகையிரத கடவையை கடக்க முயன்ற ஆண் காட்டு யானை கொழும்பில் இருத்து மட்டக்களப்பை நோக்கி பயனித்த புகையிரத்தில் மோதுண்டு பரிதாபமாக பலியாகியுள்ளது . பலியான யானையின் சடலத்தினை படத்தில் கானலாம்.

முத்திரை வரி நிலுவையாக பெறப்பட்ட நிதியினை அபிவிருத்தி வேலைகளுக்கு பயன்படுத்த தீர்மானம்

Image
கல்முனை மாநகர சபையினால் கடந்த 2009ஆம் ஆண்டிற்கான முத்திரை வரி நிலுவையாக பெறப்பட்ட ஒரு கோடி ஐம்பத்தாறாயிரத்து நானூற்றி எண்பத்தி மூன்று ரூபா தொகை நிதியினை மாநகர எல்லை பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  மேற்படி தொகை;கான காசோலை மாநகர முதல்வரினால் மாநகர சபை கணக்காளரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று மாலை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது. கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப்யின் முயற்சியின் பயனாக பெறப்பட்ட இந்த நிதி தொடர்பாக நேற்று இடம்பெற்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கான அமர்வின்போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.  இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் உட்பட கணக்காளர் எல்.டீ.சாலித்தீன், மாநகர சபை உறுப்பினர் ஏ.நிசார்டீன், மாநகர  முதல்வரின் செயலாளர் ஏ.எல்.எம்.இம்ஸாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

7லட்சத்து 97 ஆயிரத்து 620 நிலக்கண்ணி வெடிகள் அகற்றல்!

Image
வடமாகாணத்தில் இதுவரையில் 7லட்சத்து 97 ஆயிரத்து 620 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக கண்ணி வெடி அகற்றும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரையில் ஆயிரத்து 936 சதுர கிலோமீற்றர் பரப்பில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் 124 சதுர கிலோமீற்றர் பரப்பில் மாத்திரமே நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்ககைகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரத்து 500 பணியாளர்கள் கண்ணி வெடி அகலும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 29 ஆய்வு கருவிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பட்டறிவு திரைப்பட வெளியீட்டு நிகழ்வு

Image
காரைதீவின் முதல் குறுந் திரைப்படமான பட்டறிவு திரைப்பட வெளியீட்டு நிகழ்வு ஞாயிறன்று காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது அதிதிகள் வரவேற்கப்படுவதையும்,  திரைப்படத் தயாரிப்பாளர் கே.ரமேஸ் குத்துவிளக்கேற்றுவதையும், திரைப்பட இயக்குனர் இ.கோபாலசிங்கம் திரைப்பட இறுவட்டை பிரதம அதிதியான ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.புஸ்பகுமாரிடம் வழங்கி வைப்பதையும், பின்பு அவர் உரையாற்றுவதையும், பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் உரையாற்றுவதையும் படத்தின் சில காட்சிகளையும் படங்களில் காணலாம். 

வாகன விபத்தில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

Image
ஹபரணை 32ஆம் மைல்கல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் வானின் சாரதி பலியானதுடன், 10 பேர்  காயமடைந்துள்ளனர்.  மருதமுனையைச் சேர்ந்த எம்.எச்.ஏ.றொஷான் (வயது 35) என்பவரே பலியானவராவார்.  கொழும்பிலிருந்து மருதமுனை நோக்கி வந்துகொண்டிருந்த வான் வாய்க்காலில் வீழ்ந்து பின்னர் மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. சாரதி தூக்கமயக்கத்தில் வானை செலுத்தியிருக்கலாமென சந்தேகிப்பதாக ஹபரணைப் பொலிஸார் தெரிவித்தனர்.  படுகாயமடைந்தவர்களில் ஒரு பெண்ணும் இரு சிறுவர்களும் அடங்குகின்றனர். படுகாயமடைந்த 3 பேரும் உடனடியாக ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த பெண் ஆபத்தான நிலையிலுள்ளதைத் தொடர்ந்து அவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

கிழக்கு மாகாண தேர்தலை நடத்துவது குறித்து நாளை ஜனாதிபதி தலைமையில் உயர் மட்டக் கூட்டம்!

Image
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடத்துவதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது. ஜனாதிபதி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் சில தினங்களுக்கு முன் நடத்திய பேச்சை அடுத்தே கிழக்குத் தேர்தல் குறித்த இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படவிருக்கிறது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முற்கூட்டியே நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கும் உயர் மட்டக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் ஆகியோருக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை கிழக்கு மாகாண சபையில் அண்மையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட கிழக்கு மாகாணத் தேர்தலை முற்கூட்டியே நடத்தக் கூடாது என்ற தீர்மான...

கிண்ணியாவில் நிலத்திற்கு அடியில் இருந்து திடீர் புகை: பரபரப்பு !

Image
கிண்ணியா, எழிலரங்கு மைதானத்திற்கு அருகிலுள்ள பிரதேச வீடொன்றிலின் நிலத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை புகை வெளியாகியுள்ளது. கழிவுப் பொருட்களைப் புதைப்பதற்காக வீட்டின் உரிமையாளர் காலை 11.00 மணியளளவில் குழி தோண்டிய போது புகை வெளியாகியுள்ளது. குறித்த வீட்டு நிலத்தின் மூன்று இடங்களிலிருந்து கடந்த 3 மணித்தியாலங்களா புகை வெளிவந்தவுள்ளமுள்ளன. நிலத்திலிருந்து தீடிரென புகை வெளியாகியமையால் குறித்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சமடைந்த பிரதேச வாசிகள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.  குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் கிண்ணியா வென்நீர் ஊற்று உள்ளது குறிப்பிடத்தக்க விடையம். இப் பகுதிக்கு அடியில் எரிமலைக் குழம்பு ஓடிக்கொண்டு இருக்கவேண்டும் இல்லையேல் அங்கு பொஸ்பரஸ் படிமங்கள் நிலத்துக்கு அடியில் இருக்கவேண்டும் என நம்பப்படுகிறது. இதன்காரணமாகவே இப் பிரதேச நிலப்பரப்பின் கீள் வெப்ப சூழ் நிலை நிலவுகறது.