தம்புள்ளை பள்ளிவாசல் ஒரு போதும் அகற்றப்படாது என ஜனாதிபதி உறுதி: றிசாட்


தம்புள்ளை பள்ளிவாசல் ஒரு போதும் அகற்றப்படமாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு உறுதிமொழி வழங்கியுள்ளார் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வந்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இப்பள்ளிவாசலின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த இடத்திலேயே தொடர்ந்து இடம்பெறும் என அமைச்சர் றிசாட் தெரிவித்தார்.

குறித்த பள்ளிவாசலை தற்போதுள்ள இடத்திலிருந்து அகற்ற ஒருபோது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அனுமதிக்காது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Views: 678
 74 3
 
By A Web Design

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்