அனுமதி பத்திரமின்றி மணல் கொண்டு செல்லலாம்!


புதிய நடைமுறை நேற்று முதல் அமுலுக்கு   -

போக்குவரத்து அனுமதி  பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்லும் புதிய நடைமுறை உடன் அமுலுக்குக் கொண்டுவரப்படுவதாக  சுற்றாடல் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இதற்கமைய  மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப் பகுதிக்குள் மணல் ஏற்றிச்செல்ல முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மணல் அகழ்வு மற்றும் ஏற்றிச் செல்லுதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றும் போதே அமைச்சர் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை விடுத்தார்.

மணல் அகழ்வு மற்றும் ஏற்றிச் செல்லுதல் தொடர்பாக காலத்திற்கு காலம் மக்களின் நலனை கருத்திற் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளோம்.

பல்வேறு நிவாரணங்களை வழங்கி வந்துள்ளோம் என்றாலும் சந்தையில் மணல் விலை குறையாததை அடுத்து மணல் அகழ்வு தொடர்பான முரண்பாடுகளை குறைக்கவும்  விலையை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்து செய்தல் தொடர்பில் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையின் அடிப்படையில் 9 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்