முத்திரை வரி நிலுவையாக பெறப்பட்ட நிதியினை அபிவிருத்தி வேலைகளுக்கு பயன்படுத்த தீர்மானம்
கல்முனை மாநகர சபையினால் கடந்த 2009ஆம் ஆண்டிற்கான முத்திரை வரி நிலுவையாக பெறப்பட்ட ஒரு கோடி ஐம்பத்தாறாயிரத்து நானூற்றி எண்பத்தி மூன்று ரூபா தொகை நிதியினை மாநகர எல்லை பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தொகை;கான காசோலை மாநகர முதல்வரினால் மாநகர சபை கணக்காளரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று மாலை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது. கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப்யின் முயற்சியின் பயனாக பெறப்பட்ட இந்த நிதி தொடர்பாக நேற்று இடம்பெற்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கான அமர்வின்போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் உட்பட கணக்காளர் எல்.டீ.சாலித்தீன், மாநகர சபை உறுப்பினர் ஏ.நிசார்டீன், மாநகர முதல்வரின் செயலாளர் ஏ.எல்.எம்.இம்ஸாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment