சரத் பொன்சேகா இன்று பிற்கபல் விதலை!
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இவர் இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் இராணுவத்தினருக்கான ஆயுத கொள்வனவில் மோசடி இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டில் 2010 பெப்ரவரி 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவருக்கு இராணுவ நீதிமன்றம் 30 மாத சிறைத்தண்டனை வழங்கியிருந்தது.
அவருக்கு இராணுவ நீதிமன்றம் 30 மாத சிறைத்தண்டனை வழங்கியிருந்தது.
அத்துடன் வெள்ளைக்கொடி வழக்கில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனையை வழங்கியது. இத்தீர்ப்புக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார். அதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி கடந்த 18 ஆம் திகதி கையெழுத்திட்டார்.
நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுருந்த அவர் நீதிமன்றம் சென்று தனது மேன்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதன்பின் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இன்று பிற்கபல் விடுதலை செய்யப்பட்டார்.
அவரை வரவேற்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் கூடியிருந்தனர்.
Comments
Post a Comment