7லட்சத்து 97 ஆயிரத்து 620 நிலக்கண்ணி வெடிகள் அகற்றல்!
வடமாகாணத்தில் இதுவரையில் 7லட்சத்து 97 ஆயிரத்து 620 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக கண்ணி வெடி அகற்றும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் ஆயிரத்து 936 சதுர கிலோமீற்றர் பரப்பில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் 124 சதுர கிலோமீற்றர் பரப்பில் மாத்திரமே நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்ககைகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆயிரத்து 500 பணியாளர்கள் கண்ணி வெடி அகலும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 29 ஆய்வு கருவிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Comments
Post a Comment