தென்கிழக்கு பல்கலையில் விரைவில் பொறியியல் பீடம்; அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உறுதி!


தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் விரைவில் நிறுவப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை விரிவுரையாளர்கள் சிலர் எதிர்ப்பதானது அவர்களது மனநலக் குறைபாட்டின் வெளிப்பாடே என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைப் பூங்காவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவற்றைத் தெரிவித்தார்.
பல்கலைகலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் தலைமையில், பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், எஸ்.எஸ்.பி.மஜீத் மற்றும் ஏ.எம்.நௌசாத் உட்பட அரசியல் பிரமுகர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.ஏ.சத்தார் உட்பட பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.
இப்பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானம், கலை, வர்த்தகம் மற்றும் வணிக முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த 454 உள்வாரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இதன்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரட்ன பட்டமளிப்பு பேருரையை நிகழ்த்தினார்.
இரண்டாம் நாள் வெளிவாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகிறது








Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்