கிழக்கு மாகாண விளையாட்டு போட்டி ஜூன் 5 இல்
கிழக்கு மாகாண கல்வி வலயங்களுக்கிடையில் மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களின் மாணவர்கள் கலந்து கொள்ளும் இப் போட்டி நிகழ்ச்சி களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை பெரு விளையாட்டுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை மெய்வல்லுநர் போட்டிகள் திருமலை மெக்கெய்சர் விளையாட்டரங்கிலும் இடம்பெறவுள்ளது.
Comments
Post a Comment