வாகன விபத்தில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

ஹபரணை 32ஆம் மைல்கல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் வானின் சாரதி பலியானதுடன், 10 பேர்  காயமடைந்துள்ளனர். 

மருதமுனையைச் சேர்ந்த எம்.எச்.ஏ.றொஷான் (வயது 35) என்பவரே பலியானவராவார். 

கொழும்பிலிருந்து மருதமுனை நோக்கி வந்துகொண்டிருந்த வான் வாய்க்காலில் வீழ்ந்து பின்னர் மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. சாரதி தூக்கமயக்கத்தில் வானை செலுத்தியிருக்கலாமென சந்தேகிப்பதாக ஹபரணைப் பொலிஸார் தெரிவித்தனர். 

படுகாயமடைந்தவர்களில் ஒரு பெண்ணும் இரு சிறுவர்களும் அடங்குகின்றனர். படுகாயமடைந்த 3 பேரும் உடனடியாக ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த பெண் ஆபத்தான நிலையிலுள்ளதைத் தொடர்ந்து அவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்