Posts

பாடசாலை மாணவர்களுக்கு இணையத்தள பரீட்சை நாளை!

Image
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடர்பாக பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தும் இணையத்தள பரீட்சையொன்றை  (Online Test)  நாளை  25ம் திகதி காலை 8.30 மணிக்கு நடத்துவதற்கு அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  பாடசாலை மாணவர்ககளது பொது அறிவு, புரிந்துக்கொள்ளும் தன்மை என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில், தொலைக்காட்சியினூடாக பாடசாலைகளுக்கிடையிலான மற்றுமொரு போட்டியொன்றை நடத்தவும் அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளது.இதனூடாக பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் வரலாறு, செயற்பாடு, அதன் நன்மைகள் என்பன தொடர்பாக பாடசாலை மாணவர்களை விழிப்;பூட்டி அதனூடாக அவர்களுக்குள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடர்பாக அறிவை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்தார். நாளை 25ம் திகதி நாடு முழுவதுமிருந்து 25 தொலைக்கல்வி நிலையங்களிலிருந்து  அழைப்பு கிடைத்துள்ள பாடசாலை மாணவர்கள் அங்குள்ள கணினிகளைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் அப்பரீட்சையில் பங்கு பெற முடியும

பெற்றோலுக்கு பதிலாய் டீசல் நிரப்பியதால், வவுனியாவில் காத்திருந்த விக்னேஸ்வரன்!

Image
  வடமாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் இன்று (23.09) யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் வழியில் தனது வாகனத்திற்கு வவுனியாவில் எரிபொருள் நிரப்பிய போது பெற்றோலுக்கு  பதிலான டீசல்  நிரப்பப்பட்டதால்  பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலமைச்சரை அங்கீகரிக்கும் கூட்டத்தினை நிறைவு செய்து கொழும்பு செல்லும் போது வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு 9.15 மணியளவில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தை டீசல் தாங்கிக்கு முன்னாள் நிறுத்தி பெற்றோல் நிரப்புமாறு சாரதியால் கோரப்பட்ட நிலையில் அங்கிருந்த பணியாளரால் பெற்றோலுக்கு பதிலாக டீசல் நிரப்பப்பட்டுள்ளது. சுமார் 60 லீற்றர் டீசல் நிரப்பட்ட பின்னரே பெற்றோல் வாகனத்திற்கு டீசல் நிரப்பப்படுவதை உணர்ந்து கொண்ட அங்கிருந்தவர்கள் வாகனத்தின் எரிபொரள் தாங்கியை கழற்றி துப்பரவு செய்து மீளவும் பொருத்திய நிலையில் அவர் தனது பயணத்தை தொடர்ந்திருந்தார். இதேவேளை அவருடன் யாழ் ம

சாய்ந்தமருது முனவ்வர் சவுதியில் காலமானார்!

Image
சாய்ந்தமருது 17ம் பிரிவை சேர்ந்த ஹஜ்ஜி முஹம்மது முனவ்வர் நேற்று சவுதி அராபிய ஜித்தாவில் காலமானார். அல் மாறாய் (AL -MARAI ) கம்பெனியில் Western  Regional  manager ஆக பணியாற்றும் இவர் வழமையாக லுஹர்  தொழுததன் பின்னேர் சற்று நேரம் உறங்கும் பழக்கத்தை வழமையாக கொண்ட இவர் நேற்று லுஹர் தொழுகைக்கு பின்னேர் தூக்கத்துக்கு செல்லவே அருகில் இருந்த எல்லோரும் வழமையாக தூங்குகிறார் என்று எண்ணிவிட்டனர். அஸர் தொழுகைக்கு வந்தவர்களே தட்டி எழுப்பி உள்ளனர். அப்போதுதான் புரிந்தது அன்னார் இறையடி சேர்ந்துவிட்டார் என்று. புனித மக்காவில் நல்லடக்கதுக்கான ஏற்பாடுகள் நடை பெற்று கொண்டிருகின்றன. 54 வயதான இவர் அஹமட் துரையின் பேரனும் மயோன் முஸ்தபாவின் சகோதரியின் மகளான பேபி இன் கணவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையும் ஆவார். அத்துடன் மு கா வின் பணிப்பாளர் யஹ்யாகான் மற்றும் அப்ரார் Enterprises நிறுவனத்தின் தலைவர் ACM. ஜின்னாஹ் (பௌசர்) ஆகியோரின் மச்சானும் ஆவர்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில்நிறைவேற்றப்பட்ட 1325 வது சட்டங்கள்

Image
யு.எம்.இஸ்ஹாக் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில்  2000 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 1325  வது பென்களுக்குஎதிரான  வன்முறை தொடர்பான சட்டத்தினால் இன்னும் பெண்கள்  வன்முறையிலிருந்து விடுபடவில்லை . இந்த சட்டம் பாதுகாப்பு சபையின் 4213வது கூட்டத்தில் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆன் திகதியன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு மாகாண த்துக்கான சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி எம்.எஸ்.ஜலீல்  தெரிவித்தார்  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான  யு.என் 1325 ஆவது பிரேரணை தொடர்பான  கலந்துரையாடல் நிகழ்வொன்று  இன்று ( 22 ) முன்னணியின் கிழக்கு மாகாணத்துக்கான சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி  எம்.எஸ்.ஜலீல் தலைமையில் கல்முனையில் நடை பெற்றது. யு.என் 1325 ஆவது பிரேரணை தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான ஆதரித்து வாதிடல் தொடர்பான  கலந்துரையாடலில்  ஊடகவியலாளர்கள்  பங்கு என்ற தலைப்பில் தலைமை உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு  அவர் பேசினார் . அவர் அங்கு உரையாற்றும் போது எம்மால் மூன்று மகளிர் நிலையங்கள் நடாத்தப் படுகின்றன  எனினும் பெண்களுக்கு எதிரான் பல்வேறு பட்ட து

வட மாகாண சபைக்கு வெற்றி பெற்றோரின் விருப்பு வாக்கு விபரங்கள்.

Image
நடைபெற்று முடிந்த வட மாகாண சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான வீட்டு சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது. அதன் வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளின் விபரம் வருமாறு. யாழ்ப்பாண மாவட்டம்.   இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளையும் அனந்தி சசிதரன் 87,870 விருப்பு வாக்குகளையும் தர்மலிங்கம் சித்தர்த்தன் 39,715 விருப்பு வாக்குகளையும் முல்லைத்தீவு மாவட்டம்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அன்ரனி ஜெயநாதன் 9,309 விருப்பு வாக்குகளையும் சிவப்பிரகாசம் சிவயோகன் 9,296 விருப்பு வாக்குகளையும், துரைராஜா ரவிகரன் 8,868 விருப்பு வாக்குகளையும் கனகசுந்தரம் சுவாமி வீரபாகு 8,702 வாக்குகளையும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக அகமட்லெப்பை காசீம் 1,726 வாக்குகளையும், கிளிநொச்சி மாவட்டம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 1 பசுபதி அரியரத்தினம் 27264 5 தம்பிராஜா குருகுலராஜா 26427 7 சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை 26132 3 கந்தசாமி திருலோகமூர்த்தி 4199 4 கேதுரட்ணம் வினுபானந்தகுமாரி 2953 2 வீரசிங்கம் ஆனந்த சங்கரி 289

ஜனாதிபதி இன்று அமெரிக்கா பயணம்

Image
ஐக்கிய நாடுகளின் 68வது பொதுச்சபை மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அமெரிக்கா செல்லவுள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டில் , ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்தார்.   வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ஜீ எல் பீரிஸும் ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் கலந்துக்கொள்ளவுள்ளார் என விஜயநந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்

ஒரே பார்வையில் வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்: 30 ஆசனங்களுடன் வடக்கை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி

இலங்கை தமிழரசுக்கட்சி 30 ஆசனங்களுடன் வடமாகாண சபையைக் கைப்பற்றியுள்ளது. வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் போனஸ் ஆசனங்கள் இன்றி இலங்கை தமிழரசுக்கட்சி 28 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.  ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படுவது வழமை. அதற்கமைவாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலதிக 2 ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தில்  இலங்கை   தமிழரசுக்கட்சி 213,907 வாக்குகளை   பெற்று 14 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 35,995 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி 855 வாக்குகளைப் பெற்றுள்ளபோதிலும் அக்கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை இலங்கை தமிழரசு கட்சி                      - 8917 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4164 சோசலிச சமத்துவக் கட்சி                   – 29 ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு       – 21 ஐக்கிய தேசியக்

மன்னார் மாவட்ட முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னணியில்.

Image
நடைபெற்று முடிந்த தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழரசுக் கட்சி ஐ.ம.சு முன்னணி ஐ.தே.கட்சி சிறி.மு. காங்கிரஸ் மன்னார் மாவட்டம் 31818 14696 180 4436 தபால் 1300 408 7 135 மொத்தம் 33 , 118 15,104 187 4,571 ஆசனங்கள்

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

Image
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,566 ஐக்கிய தேசியக் கட்சி – 2,568 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27 மக்கள் விடுதலை முன்னணி – 284 ஜனநாயகக் கட்சி – 725 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 68 தேசப்பற்று தேசிய முன்னணி – 9 எங்கள் தேசிய முன்னணி – 7 ஏனையவை – 33 பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 12,130 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 11,853 செல்லுபடியான மொத்த வாக்குகள் – 11,287 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 566

முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றி- -

Image
வடமாகாண சபை தேர்தலின் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு… இலங்கை தமிழரசு கட்சி – 28266 (4 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7209 (1 ஆசனம்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-199 ஐக்கிய தேசியக் கட்சி – 197 மக்கள் விடுதலை முன்னணி – 30 பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 53,683 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 38,802 செல்லுபடியான மொத்த வாக்குகள் – 35,982 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,820

வவுனியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

Image
வடமாகாண சபை தேர்தலின் வவுனியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ள. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு. இலங்கை தமிழரசு கட்சி                       - 901 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 323 ஐக்கிய தேசியக் கட்சி                             -65 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 24  மக்கள் விடுதலை முன்னணி            - 15 ஜனநாயக கட்சி                                         -12 சுயேட்சைக்குழு-6                                   -05 சுயேட்சைக்குழு-7                                  -01

யாழ்ப்பாணம் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

Image
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட தபால் மூலமான வாக்களிப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி 7625 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1099 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 35 வாக்குகளையும் பெற்றுள்ளன. இ.த.க        7625 ஐ.ம.சு.மு    1099 ஐ.தே.க        35 செல்லுப்படியான வாக்குகள்       8835 நிராகரிக்கப்பட்ட வாக்குகள்           114 அளிக்கப்பட்ட வாக்குகள்              8949

கிளிநொச்சி மாட்டத்திற்கான தபால்மூல வாக்குகள் வெளியாகியுள்ளது.

Image
நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. வட மாகாணம் கிளிநொச்சி மாட்டத்திற்கான தபால்மூல வாக்குகள் வெளியாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 756 வாக்குகளையும்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 160 வாக்குகளையும்  ஏனைய கட்சிகள் பூச்சியம் வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்: கூட்டமைப்புக்கு வெற்றி

Image
வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 146 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 2 வாக்குகளையும் ஜனநாயகக் கட்சி 1 வாக்கினையும் பெற்றுள்ளன. பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 831இ அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 800இ செல்லுபடியான மொத்த வாக்குகள் 795இ நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5.

யாழ் மதிய கல்லூரிக்கு வாக்கு பெ ட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப் படுகின்றது

Image
இஸ்ஹாக் -நற்பிட்டிமுனை  வட   மாகாண்   சபை தேர்த ல் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில்  வாக்கெடுப்பு நிலையங்களில் இருந்து  வாக்கெண்  ணு  ம்  யாழ்  மதிய கல்லூரிக்கு வாக்கு பெ  ட்டிகள் பலத்த பொலிஸ்   பாதுகாப்புடன்   எடுத்து செல்லப் படுகின்றது 

உதட்டு முத்தமிட, செல்போனில் சத்தமாக பேச தடை: ஆஸ்திரியாவில் புதிய உத்தரவு

Image
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமுல்படுத்தியுள்ளதாம். பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்

Image
இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன் பிரகாரம், மத்திய மாகாணம் கண்டி                                   58 % மாத்தளை                          54 % நுவரெலியா                       54.5 % வடமேல் மாகாணம் புத்தளம்                             55-60  % குருநாகல்                         55 % வடமாகாணம் யாழ்ப்பாணம்                  50 % கிளிநொச்சி                      60 % வவுனியா                          61 % முல்லைத்தீவு                63 %      மன்னார்                             70 %

மாகாணசபைத் தேர்தல்: நண்பகல் வரையான வாக்களிப்பு வீதம்

இன்று காலை 7 மணியளவில் வாக்களிப்பு ஆரம்பமாகியதிலிருந்து நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் வருமாறு: மாத்தளை - 30% கண்டி - 40% நுவரெலியா-  35% - 40% கிளிநொச்சி - 30% முல்லைத்தீவு - 40% வவுனியா - 25% மன்னார் - 30% குருநாகல் - 30%

மூன்று மாகாணங்களிலும் அமைதியான வாக்களிப்பு!

Image
வடக்கு- வடமேல்- மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று (21) நடைபெறுகின்றது. மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்கவுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியது. மூன்று மாகாணங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மான்களுடன் உறவாடும் வெள்ளைக் குரங்கு!

Image
சுமார் ஐந்து மாத வயதுடைய வெள்ளை நிறக்குரங்கொன்று அம்பாறை வனஜீவராசிகள் மிருக வைத்திய பிரிவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அம்பாறை வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெள்ளைக் குரங்கு, மேற்படி மிருக வைத்திய பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் மான் குட்டிகளுடன் விளையாடி ,உறவாடி  வருகின்றது. இந்த வெள்ளைக் குரங்கு , அந்த மான் குட்டிகளோடு மிகவும் அன்போடு பழகி வருவதாகவும் மிருக வைத்திய அதிகாரி நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார்