சாய்ந்தமருது முனவ்வர் சவுதியில் காலமானார்!

சாய்ந்தமருது 17ம் பிரிவை சேர்ந்த ஹஜ்ஜி முஹம்மது முனவ்வர் நேற்று சவுதி அராபிய ஜித்தாவில் காலமானார்.
அல் மாறாய் (AL -MARAI ) கம்பெனியில் Western  Regional  manager ஆக பணியாற்றும் இவர் வழமையாக லுஹர்  தொழுததன் பின்னேர் சற்று நேரம் உறங்கும் பழக்கத்தை வழமையாக கொண்ட இவர் நேற்று லுஹர் தொழுகைக்கு பின்னேர் தூக்கத்துக்கு செல்லவே அருகில் இருந்த எல்லோரும் வழமையாக தூங்குகிறார் என்று எண்ணிவிட்டனர். அஸர் தொழுகைக்கு வந்தவர்களே தட்டி எழுப்பி உள்ளனர். அப்போதுதான் புரிந்தது அன்னார் இறையடி சேர்ந்துவிட்டார் என்று.
புனித மக்காவில் நல்லடக்கதுக்கான ஏற்பாடுகள் நடை பெற்று கொண்டிருகின்றன.
54 வயதான இவர் அஹமட் துரையின் பேரனும் மயோன் முஸ்தபாவின் சகோதரியின் மகளான பேபி இன் கணவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையும் ஆவார். அத்துடன் மு கா வின் பணிப்பாளர் யஹ்யாகான் மற்றும் அப்ரார் Enterprises நிறுவனத்தின் தலைவர் ACM. ஜின்னாஹ் (பௌசர்) ஆகியோரின் மச்சானும் ஆவர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்