பாடசாலை மாணவர்களுக்கு இணையத்தள பரீட்சை நாளை!

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடர்பாக பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தும் இணையத்தள பரீட்சையொன்றை (Online Test) நாளை  25ம் திகதி காலை 8.30 மணிக்கு நடத்துவதற்கு அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


 பாடசாலை மாணவர்ககளது பொது அறிவு, புரிந்துக்கொள்ளும் தன்மை என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில், தொலைக்காட்சியினூடாக பாடசாலைகளுக்கிடையிலான மற்றுமொரு போட்டியொன்றை நடத்தவும் அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளது.இதனூடாக பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் வரலாறு, செயற்பாடு, அதன் நன்மைகள் என்பன தொடர்பாக பாடசாலை மாணவர்களை விழிப்;பூட்டி அதனூடாக அவர்களுக்குள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடர்பாக அறிவை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்தார்.

நாளை 25ம் திகதி நாடு முழுவதுமிருந்து 25 தொலைக்கல்வி நிலையங்களிலிருந்து  அழைப்பு கிடைத்துள்ள பாடசாலை மாணவர்கள் அங்குள்ள கணினிகளைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் அப்பரீட்சையில் பங்கு பெற முடியும்

. நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொலைக்கல்வி நிலையத்தின் பிரதான அலுவலகத்தில் இருந்து இப்பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. முதற்கட்டத்தில் சுமார் 4500 மாணவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் வழிகாட்டலில் கல்வி அமைச்சு மற்றும் தொலைக்கல்வி பிரதான அலுவலகம் இணைந்து இக்கல்வித் திட்டம் முன்னெடுக்கப்படுவுள்ளது எனவும் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்