மூன்று மாகாணங்களிலும் அமைதியான வாக்களிப்பு!
வடக்கு- வடமேல்- மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று (21) நடைபெறுகின்றது.மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியது. மூன்று மாகாணங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியது. மூன்று மாகாணங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Comments
Post a Comment