ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில்நிறைவேற்றப்பட்ட 1325 வது சட்டங்கள்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் 2000 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 1325 வது பென்களுக்குஎதிரான வன்முறை தொடர்பான சட்டத்தினால் இன்னும் பெண்கள் வன்முறையிலிருந்து விடுபடவில்லை . இந்த சட்டம் பாதுகாப்பு சபையின் 4213வது கூட்டத்தில் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆன் திகதியன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு மாகாண த்துக்கான சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி எம்.எஸ்.ஜலீல் தெரிவித்தார்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான யு.என் 1325 ஆவது பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்று ( 22 ) முன்னணியின் கிழக்கு மாகாணத்துக்கான சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.எஸ்.ஜலீல் தலைமையில் கல்முனையில் நடை பெற்றது.
யு.என் 1325 ஆவது பிரேரணை தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான ஆதரித்து வாதிடல் தொடர்பான கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் பங்கு என்ற தலைப்பில் தலைமை உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு அவர் பேசினார் .
அவர் அங்கு உரையாற்றும் போது எம்மால் மூன்று மகளிர் நிலையங்கள் நடாத்தப் படுகின்றன எனினும் பெண்களுக்கு எதிரான் பல்வேறு பட்ட துன்புறுத்தல் நிகழ்வுகள் நடைபெறுவது தினமும் பதியப் படுகின்றது. பெண்களுக்கு எதிராக இடம் பெறும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க ஊடகவியலாளர்களும் முன்வர வேண்டும் . இதற்கென பகிரங்கமாக ஊடகவியலாளர் மாநாடொன்றை நடாத்தி பெண்களையும் அதிகாரிகளையும் ஓரிடத்தில் அமர்த்தி பாலியல் மற்றும் வன்முறைகள் தொடர்பான பரஸ்பர கலந்துரையாடலை நடாத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் .
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் 2000 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 1325 வது சட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதன் பிரகாரம் பெண்களுக்கான அரசியல் மற்றும் இணைந்த செயற்பாட்டு உரிமைகள் வழங்கப் பட்டுள்ளமை தொடர்பாகவும் விரிவாக ஆராய வேண்டியுள்ளது. என அவர் தெரிவித்தார் .
இச்செயல் திட்டத்துக்கு பொறுப்பான ஊடக இணைப்பாளர் கலாநிதி எஸ்.எல்.ஏ.அஸீஸ் அங்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் 2000 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 1325 வது சட்டங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளித்தார் .நிகழ்வில் பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment