Posts

ஆசியா மன்றத்தின் கொரிய நாட்டிற்கான பிரதிநிதி பீட்டர் பெக் வியாழக்கிழமை கல்முனைக்கு விஜயம்

Image
ஆசியா மன்றத்தின் கொரிய நாட்டிற்கான பிரதிநிதி பீட்டர் பெக் வியாழக்கிழமை கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டார். கல்முனை மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த இவர், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபை சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் கல்முனை மேயரிடம் மாநகர சபைக்காக கணனி இயந்திரமொன்றும் கல்முனையின் அபிவிருத்தி தெடர்பான நிகழ்சித்திட்டத்தின் பிரதியும் ஆசிய மன்ற பிரதிநிகளினால் கையளிக்கப்பட்டது.  கல்முனை மாநகரின் புதிய நகர அபிவிருத்தி திட்டம் ஒன்றினை தயாரிப்பதற்கும் எதிர்கால அபிவிருத்திக்கு உதவுவதற்கும் ஆசிய மன்றத்தினால் இக்கலந்துரையாடலின் மூலம் உடன்பாடு காணப்பட்டுள்ளது. அத்துடன் கல்முனை மேயரை கொரிய நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பீட்டர் பெக் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

Image
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் வேலை  நிறுத்தம் தொடர்கிறது. கல்முனை பஸ் டிப்போ இழுத்து மூடப்பட்டிருப்பதையும் பஸ் தரிப்பு நிலையத்தில் தனியார் பஸ் நிறுத்தப்பட்டு தனியார் சேவைகள் இடம் பெறுவதையும் காணலாம்.

கடனாக வாங்கிய 10 இலட்சம் ரூபாவைத் தருவதற்கு மறுக்கிறார்கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்

Image
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் என்னிடம் கடனாக வாங்கிய 10 இலட்சம் ரூபாவைத் தருவதற்கு மறுக்கிறார். இந்த விடயத்தை தலைவர் ஹக்கீமிடம் தெரிவித்தேன். ஒன்றும் நடக்கவில்லை. அதனால் மிக விரைவில் பொலிஸாரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவிக்கிறார் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப். கல்முனை மாநகர சபையில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்விடயத்தை அம்பலப்படுத்தினார். இது தொடர்பில் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அங்கு மேலும் கூறியதாவது; 'நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு சேவை செய்து வந்திருக்கின்றேன். என்னிடம் இருப்பதை ஏழை மக்களுக்கு கொடுப்பதில் நான் பின்னிற்கவில்லை. அவ்வாறு இருந்த என்னை அரசியலுக்கு கொண்டு வந்ததே மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஜெமீல்தான். இவர் போன்றவர்களின் தூண்டுதலால் தான் நான் அரசியலுக்கு வந்தேன். இல்லையென்றால் நான் எனது தொழிலைப் பார்த்துக் கொண்டு கொழும்பில் இருந்திருப்பேன். நான் அரசியலுக்கு வருவதற்கு எத்தனித்த போது சாய்ந்தமருதுக்கென்று இருந்த ஒரு அரசியல்வாதி சகோதரர் ஜெமீல் ஆவார். இதனால் அவரை சந்தித்து விடயத்தைக் கூறினேன்.

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது நான்காவது மாத சம்பளத்தினை நற்பட்டிமுனையை சேர்ந்த ஒருவருக்கு நன்கொடையாக வழங்கினார்.

Image
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது நான்காவது மாத சம்பளத்தினை நற்பட்டிமுனையை சேர்ந்த ஒருவருக்கு நன்கொடையாக வழங்கினார். நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த 40 வருடங்களாக முஅத்தினாக கடமையாற்றி தற்போது நோய்வாய்ப்பட்டுள்ள அப்துல் மஜீதின் மருத்துவ செலவிற்காகவே இந்நிதியினை வழங்கினார். தனது மாத சம்பளத்தினை ஏழை குடும்பத்திற்கு வழங்குவேன் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தார். இதற்கிணங்வே மேயர் சிராஸ் மீராசாஹிபின் மாத சம்பளம் ஏழைகளுக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த கல்முனை மாநகரினை அபிவிருத்தி செய்தே தீருவேன்.

Image
எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த கல்முனை மாநகரினை அபிவிருத்தி  செய்தே தீருவேன். எனது அதிகாரத்தின் மூலம் எந்த இனப்பாகுபாடும் பிரதேச வேறுபாடும் அற்ற ரீதியில் அபிவிருத்திகளை மேற்கொள்ள எத்தனிக்கிறேன் என்பதற்கு இப்பிரதேச தமிழ் மக்களே ஆதாரமாகும் என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை த.தே.கூ. உறுப்பினர் ஏ.அமிர்தலிங்கம், தனக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பத்திரிகையில் வெளியிட்டிருந்த செய்திகளுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது; 'கல்முனை மாநகர முதல்வராகிய நான் இனவாதத்ததை தூண்டுவதாகவும் தமிழ் பிரதேசத்தின் அபிவிருத்தியை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் த.தே.கூ உறுப்பினர் ஏ.அமிர்தலிங்கம் பத்திரிகை அறிக்கை மூலம் குற்றம் சாட்டியிருக்கின்றார். இதன்மூலம் தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்க அவர் எடுக்கின்ற முயற்சியாகவே இதனை நாம் பார்க்கின்றோம். கல்முனை மாநகர சபை உறுப்பினர் அமிர்தலிங்கம் போன்றோரின்

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

Image
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் எம்.எச். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கலந்து சிறப்பித்தார் இப்போட்டிகளின்போது பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, வினோத உடைப்போட்டி மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகளும் இங்கு இடம்பெற்றது.

அக்கரயூர் உவைஸ் ஏறுகிறார் குதிரை

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் யூ.எல்.உவைஸ், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணைவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணியளவில் அறிவித்துள்ளார். தனது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே உவைஸ் இந்த அறிவித்தலை விடுத்தார். இதற்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மஜ்லிஸுல் சுராவின் பிரதி தலைவர், அக்கரைப்பற்று அமைப்பாளர் மற்றும் அக்கரைப்பற்று மத்திய குழு தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்தவாகவும் பிரகடணப்படுத்தினார். அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழுவை கலைப்பதுடன் தன்னால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச கொத்தணி அமைப்பாளர்களின் பதவியை இரத்து செய்வதாகவும் அறிவித்தார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட உவைஸ் அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. யூ.எல்.உவ

அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் மாரடைப்பால் மரணமானார்.

Image
கிழக்கு மாகாணத்தின் மனித நேயப்பணியாளரும் எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் முன்னாள் மட்டு அம்பாறை மாவட்ட இயக்குனரும் மட்டு அம்பாறை மறை மாவட்ட ஆயர் இல்லத்தின் தற்போதய நிதிப் பொறுப்பாளருமான கலாநிதி அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் நேற்று (08) அதிகாலை மாரடைப்பால் மரணமானார். மரணிக்கும்போது இவருக்கு வயது 50 ஆகும். அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்டர் திடிரென மாரடைப்பினால் நேற்றிரவு பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்கையில் இவர் மரணமடைந்துள்ளார். கல்முனை பற்றிமா கல்லூரி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் 12 வருடங்கள் எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் இயக்குனராக கடமை யாற்றினார். இவர் சுனாமி மற்றும் அனர்த்தம் போன்றவற்றின்போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மனிதாபிமானப்பணி செய்து அனைத்து சமூங்களினதும் நன் மதிப்பை பெற்றார். சமாதான நீதவானான அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் புதுடில்லியில் 2006ம் ஆண்டு சிறந்த சமூக சேவையாளருக்கான விருதினைப் பெற்றதுடன் சுனாமி அனர்த்தத்தின்போது சிறப்பாக

நீண்டகால பிரச்சினைக்கு உடனடி தீர்வு

Image
கல்முனை மாநகர சபை உறுப்பினர் பரகத் நடவடிக்கை  கல்முனை செய்லான் வீதியினை குறுகறுதுச் செல்லும் வாடிகனில்  மூடியின் ஒரு பகுதி மிக நீண்ட காலமாக உடைந்த நிலையில் காணப்பட்டது இதனால் மக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்பட்டுவந்தனர். குறித்த பிரச்சினை தொடர்பாக அப்பிரதேச மக்கள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கதுல்லாவின் கவனத்துக்கு கொண்டுவந்ததன் பயனாக, குறித்த பிரச்சினையை கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கதுல்லா உடனடியாக தீர்த்துவைத்தார்,

சர்வதேச மகளிர் தினம்

Image
இன்று சர்வதேச மகளிர் தினம் 

கல்முனை பிரதேச செயலக மகளிர் தினம்

Image

கல்முனை கார்மேல் பாத்திமா இல்ல விளையாட்டுப் போட்டி

Image
கல்முனை கார்மேல் பாத்திமா  இல்ல விளையாட்டுப் போட்டியில் டோரதிய இல்லம் சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளது. கடந்தவாரம் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ஸ்டீவன் மதியு தலைமையில் நடை பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறபித்தார்.

பியசேன எம்.பியை பதவியிலிருந்து நீக்க இடைக்காலத் தடை

Image
அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார் பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் பிய சேனவை, எம்.பி. பதவியிலிருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதி மன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட பொடியப்பு பியசேன அக்கட்சி சார்பில் பாராளுமன்றத் துக்குத் தெரிவுசெய்யப்பட்டார். இவர் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அர சாங்கத்துக்குப் பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கட்சி தீர்மானித்த நிலையில், அதற்கு எதிராக பியசேன சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிபதி டி.கனேபொல பியசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக பியசேன சார்பில் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்

கல்முனை மாநகரம் சகல வசதிகளும் கொண்ட நவீன நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

Image
தேசிய முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் கிழக்கிலங்கையின் முன்னணி வர்த்தகக் கேந்திர நிலையமாகவும் தென்கிழக்கின் முகவெற்றிலை எனவும் அம்பாரை கரையோர மாவட்டத்தின் தலைநகர் எனவும் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் கல்முனை மாநகரம் சகல வசதிகளும் கொண்ட நவீன நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது. கல்முனை மாநகரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலுயுறுத்தி தேசிய முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் கவுன்சில் தலைவர் எம்.ஐ.எம். வலீத், செயலாளர் நாயகம் அஸ்லம் எஸ். மௌலானா ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கல்முனை மாநகரினை மையமாகக் கொண்டு காலத்திற்குக் காலம் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பதவிகள் வகித்தாலும் இன்று வரை கல்முனையின் அபிவிருத்தியானது மிகவும் மந்த கதியிலேயே நடைபெறுவதனை காணக்கூடியதாக உள்ளது. கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நமது நகரமும்

வாகரையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

Image
வாகரை பொலிஸ் பிரிவில் கதிரவெளி பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகை ஆயுதங்களை நேற்று முன்தினம் இரவு பொலிஸார் மீட்டுள்ளனர். வாகரை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கதிரவெளியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆர்.பி.ஜி. குண்டு-09, மோட்டார் குண்டு- 31, 50 மில்லி மீற்றர் துப்பாக்கி ரவைகள்- 201, துப்பாக்கி ரவைகள்- 183, கிளைமோர பெற்றரிகள்- 12, மோட்டார் பியூஸ் – 49 என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி ஆயுதங்கள் யுத்த காலத்தில் புதைக்கப்பட் டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஐ.நாவில் இலங்கையைக் காப்பாற்ற இந்தியா முடிவு ?

Image
போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.  ´குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு´ எதிராக ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்திருப்பதன் மூலம், இலங்கையைக் காக்க இந்தியா முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.  எனவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை இந்தியா ஆதரிக்காது என்ற என்பது இலங்கைக்கு நம்பிக்கை அளித்துள்ளது.  ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 19வது கூட்டம் பெப்ரவரி 27-ம் திகதி ஆரம்பமாகி நடந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை ராணுவத்தினர் புரிந்த போர்குற்றம் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட உள்ளது.  போர்க் குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் மனித உரிமைக் குழுக் கூட்டத் தொடரில் இந்தியா சார்பில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் "குறிப்பிட்ட ஒரு நாட்டுக

பழுதடைந்த மின் விளக்குகளை திருத்துவதிலும் இன விகிதாசாரம் வேண்டும் எனக் கோருவது எந்த வகையில் நியாயம்?

Image
கல்முனை தமிழ்ப் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் தனக்கூடாகவே  மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  உறுப்பினர் அமிர்தலிங்கம் விடுத்த கோரிக்கையை நான் நிறைவேற்றவில்லை என்பதாலேயே 'தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிப்பு' என்ற கோசத்தை அவர் முன்வைத்துள்ளார் என கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார். கல்முனை முதல்வரினால் 'தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிப்பு' என்று ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் மேலும் தெரிவித்திருப்பதாவது; 'கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான திரு. அமிர்தலிங்கம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது கல்முனை அபிவிருத்தி நடவடிக்கைகளில் கல்முனை தமிழ்ப் பிரதேசம் மேயரினால் புறக்கணிக்கப்படுவதாக பேசியுள்ளார். இந்த செய்தி சில தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்தது. ஆனால் உ

கல்முனை அபிவிருத்திக்கு நாம் ஒரு போதும் தடையல்ல

Image
ஜவாத் , ஜெமீல் அறிவிப்பு  கல்முனை மாநகர அபிவிருத்திக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் 350 மில்லியன் ரூபா ஒதுக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார். "நான் அறிந்த வரையில் ஆளுநரிடம் 350 மில்லியன் ரூபா செலவு செய்யுமளவுக்கு பணமில்லை. அப்படியான அபிவிருத்தி வேலைகளை செய்வதாயின் கிழக்கு மாகாண சபையின் நிதியிலிருந்து பெற்று தான் செய்ய வேண்டும்" என அவர் குறிப்பிட்டார். "அவ்வாறு மேற்கொள்வதாயின் மாகாண சபையின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே மேற்கொள்ள முடியும். ஆனால் இவ்வாறான எந்த நிதியும் கிழக்கு மாகாண சபையிலிருந்து கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்படவில்லை" எனவும் ஜவாத் தெரிவித்தார். கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம பெப்ரவரி 21ஆம் திகதி கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார். இந்த விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Image
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.  இன்றைய தினம் இடம்பெற்ற மேற்படி அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் பின்னர் அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனியாக சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது. இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பி.எச்.பியசேன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்முனை மாநகர பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய 443 மில்லியன் ரூபா

Image
கல்முனை மாநகர பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய 443 மில்லியன் ரூபா இன்று அம்பாறையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜ பக்ச தலைமையில் நடை பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒதுக்கீடு செயப் பட்டுள்ளது 

பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும்

Image
பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக  முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என உறுதியளித்துள்ளதாக ஜெனிவாவிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகளை பெருந்தோட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் ஜெனிவா நகரில் வைத்து சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர், கட்டார் வெளிவிவகார அமைச்சர் கலீத் பின் முஹம்மத் அல் - அதீயா, மலேசிய வெளிநாட்டு அமைச்சர் ஹனீபா அமான் மற்றும் சவூதி அரேபியா அமைச்சர் பந்தர் பின் முஹம்மட் அல் அபான் ஆகியோருடனே இலங்கை குழுவினர் பேச்சு நடத்தியதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார். அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் ஈரா

சகல எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இலங்கை வெற்றிபெறும் !

Image
ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் மகிந்த சமர சிங்க  நேற்று மாலை உரையாற்றிய படம் 

கல்முனையில் இன்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
மேற்குலக நாடுகளை அராஜகத்தை கண்டித்து தாய் நாட்டை காக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்றும் கல்முனையில் இடம் பெற்றது . பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்,கல்முனை மாநகர் முதல்வர் சிராஸ் மீரா சாஹிப்,மாகான சபை உறுப்பினர் துல்சான் ஆகியோரின் பங்களிப்புடன் காமுனை ,சாய்ந்தமரு வாழ் பொதுமக்களும்,கல்முனை மாநகர் சபை உறுப்பினர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சாய்ந்தமருது பள்ளிவாசல் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கல்முனை நகர்வரை சென்று முடிவடைந்தது, இன்றைய தினம் சாய்ந்தமருது,கல்முனை பிரதேச வர்த்தக நிலையங்கள் முற்றாக அடைக்கப்பட்டு இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடை பெற்றது.