அக்கரயூர் உவைஸ் ஏறுகிறார் குதிரை


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் யூ.எல்.உவைஸ், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணைவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணியளவில் அறிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே உவைஸ் இந்த அறிவித்தலை விடுத்தார். இதற்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மஜ்லிஸுல் சுராவின் பிரதி தலைவர், அக்கரைப்பற்று அமைப்பாளர் மற்றும் அக்கரைப்பற்று மத்திய குழு தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்தவாகவும் பிரகடணப்படுத்தினார்.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழுவை கலைப்பதுடன் தன்னால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச கொத்தணி அமைப்பாளர்களின் பதவியை இரத்து செய்வதாகவும் அறிவித்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட உவைஸ் அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
யூ.எல்.உவைஸுடன் அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.எம்.பஹீஜ் உள்ளிட்ட சுமார் ஐந்து அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தல் வேட்பாளர்களும் தேசிய காங்கிரஸில்  இணையவுள்ளனர்.
இதேவேளை, "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட காரணம் இதுவரை நிறைவேறவில்லை. அத்துடன் அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாற்று அரசியலை மேற்கொள்வதற்கு எந்தவித நடடிக்கையும் மேற்கொள்ளவிலை. இதனாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிவிதாக" சட்டத்தரணி பஹீஜ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் சட்டத்தரணி பஹீஜ் மேலும் தெரிவிக்கையில்,
" அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாற்று அரசியலை மேற்கொள்வதற்கு எந்தவொரு வியூகத்தையும் இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் மேற்கொள்ளவில்லை.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள், இலங்கை அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் நம்பிக்கையை இழந்துள்ளது.
இந்நிலையில் கிழக்கு மாகாண மக்களின் பெரும் ஆதரவினை பெற்றுள்ள அமைச்சர் அதாவுல்லாவை பலப்படுத்தி அக்கரைப்பற்று அரசியலையும் கிழக்கு மாகாண அரசியலையும் பாதுகாப்பதற்காக தேசிய காங்கிரஸில் இணைகின்றோம்" என்றார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்