பியசேன எம்.பியை பதவியிலிருந்து நீக்க இடைக்காலத் தடை
அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார் பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் பிய சேனவை, எம்.பி. பதவியிலிருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதி மன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட பொடியப்பு பியசேன அக்கட்சி சார்பில் பாராளுமன்றத் துக்குத் தெரிவுசெய்யப்பட்டார். இவர் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அர சாங்கத்துக்குப் பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கட்சி தீர்மானித்த நிலையில், அதற்கு எதிராக பியசேன சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிபதி டி.கனேபொல பியசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக பியசேன சார்பில் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment