பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும்


பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா 


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக  முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என உறுதியளித்துள்ளதாக ஜெனிவாவிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகளை பெருந்தோட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் ஜெனிவா நகரில் வைத்து சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர், கட்டார் வெளிவிவகார அமைச்சர் கலீத் பின் முஹம்மத் அல் - அதீயா, மலேசிய வெளிநாட்டு அமைச்சர் ஹனீபா அமான் மற்றும் சவூதி அரேபியா அமைச்சர் பந்தர் பின் முஹம்மட் அல் அபான் ஆகியோருடனே இலங்கை குழுவினர் பேச்சு நடத்தியதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சலேஹியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது  இலங்கைக்கு ஆதரவளிக்க ஈரான் உறுதியளித்தாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்