வாகரையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு



வாகரை பொலிஸ் பிரிவில் கதிரவெளி பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகை ஆயுதங்களை நேற்று முன்தினம் இரவு பொலிஸார் மீட்டுள்ளனர்.
வாகரை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கதிரவெளியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆர்.பி.ஜி. குண்டு-09, மோட்டார் குண்டு- 31, 50 மில்லி மீற்றர் துப்பாக்கி ரவைகள்- 201, துப்பாக்கி ரவைகள்- 183, கிளைமோர பெற்றரிகள்- 12, மோட்டார் பியூஸ் – 49 என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி ஆயுதங்கள் யுத்த காலத்தில் புதைக்கப்பட் டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!