கடனாக வாங்கிய 10 இலட்சம் ரூபாவைத் தருவதற்கு மறுக்கிறார்கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் என்னிடம் கடனாக வாங்கிய 10 இலட்சம் ரூபாவைத் தருவதற்கு மறுக்கிறார். இந்த விடயத்தை தலைவர் ஹக்கீமிடம் தெரிவித்தேன். ஒன்றும் நடக்கவில்லை. அதனால் மிக விரைவில் பொலிஸாரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவிக்கிறார் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப்.


கல்முனை மாநகர சபையில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்விடயத்தை அம்பலப்படுத்தினார்.

இது தொடர்பில் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அங்கு மேலும் கூறியதாவது;

'நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு சேவை செய்து வந்திருக்கின்றேன். என்னிடம் இருப்பதை ஏழை மக்களுக்கு கொடுப்பதில் நான் பின்னிற்கவில்லை. அவ்வாறு இருந்த என்னை அரசியலுக்கு கொண்டு வந்ததே மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஜெமீல்தான். இவர் போன்றவர்களின் தூண்டுதலால் தான் நான் அரசியலுக்கு வந்தேன். இல்லையென்றால் நான் எனது தொழிலைப் பார்த்துக் கொண்டு கொழும்பில் இருந்திருப்பேன்.

நான் அரசியலுக்கு வருவதற்கு எத்தனித்த போது சாய்ந்தமருதுக்கென்று இருந்த ஒரு அரசியல்வாதி சகோதரர் ஜெமீல் ஆவார். இதனால் அவரை சந்தித்து விடயத்தைக் கூறினேன். நேரடியாகச் சென்று தலைவரிடம் என்னால் கதைக்க முடியாமல் இல்லை. ஜெமில்தான் எனக்கு அரசியலைக் காட்ட வேண்டும் என்பதுமல்ல.

என்றாலும் இந்த அடிப்படையில் அவரிடம் சென்று நானும் அரசியலுக்கு வர வேண்டும் எனவும்  அதற்கு உங்களுடைய உதவி தேவை என்றும கூறியபோது; சமூதாயத்தைப் பற்றி மட்டும் சிந்தித்தால் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஜெமீல் கூறினார். டிக்கட் கிடைக்கும் வரைக்கும் எனக்காக அர்பபணம் செய்த ஒருவர் ஜெமீல். அதை நான் என்றும் மறக்கமாட்டேன்.

ஆனால பின்பு தேர்தல் காலத்தில் எனது உயிருக்குக் கூட அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர் தான் இந்த ஜெமீல். அதற்குரிய ஆதாரங்களை எல்லாம் நான் வைத்திருக்கிறேன். இவ்வாறான நிலையில் எல்லா அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து என்னை வீழ்த்த முற்பட்டபோது, நான் எதற்கும் அஞ்சாமல் இறைவனுடைய உதவியுடன் தனித்துப் போராடி வென்றேன்.

என்னோடு சினேக பூர்வமாக இருக்கும் காலத்தில் ஜெமீல் கடனாக 10 இலட்சம் ரூபா வாங்கினார். அதற்காக காசோலையைத் தந்தார். அந்தக் காசோலை மாறியது. பின்னர் தேர்தலுக்கு சுமார் இரண்டு வாரத்துக்கு முன் தொலைபேசியில் அழைத்து 15 இலட்சம் ரூபா மீண்டும் கேட்டார். அவ்வளவு எனக்கு தர முடியாது எனக் கூறி 10 இலட்சம் மீண்டும் தருவதமாகக் கூறினேன். அவரது எச்.என்.பி. கணக்கிலக்கத்தை எனக்கு வழங்கினார். அதற்கு நான் 10 இலட்சம் ரூபா வைப்பிலிட்டேன். இதற்கான சகல ஆதாரமும் என்னிடம் உண்டு.

இதன் பின்னர் தேர்தல் நெருங்கியது எனது உயிர் போனாலும் ஸிராசை மேயராக விட மாட்டேன் என்றார். அனால் அது நடக்கவில்லை. நான் வெற்றியீட்டினேன். தேர்தல் முடிந்து ஒரு மாதத்தின் பின்னர் நான் எனது பணத்தை கேட்டபோது, அப்படி ஒரு பணமும் எனக்கு தருவதில்லை என்று ஜெமீல் கூறி இருந்தார்.

இந்த விடயத்தை நான் தலைவர் நீதியமைச்சர் ஹக்கீம் அவர்களிடம் கூறியபோது, அவர் சற்று அவகாசம் வழங்குமாறு சொன்னார். ஆனால் இன்னும் முடிவு கிடைக்கவில்லை. இதனால் மிக விரைவில் பொலிசாருடைய கையில் இந்த விடயம் கொடுக்கப்படும்.

தான் நாகரீகமற்ற அரசியல் வாதியை கொண்டு வந்து விட்டேன் என்று அவர் ஒரு கூட்டத்தில் கூறியிருந்தார். மக்களிடம் எவ்வாறு நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அறிந்தவன் நான். பிறரிடம் கடனாகப் பெற்ற பணத்தை கொடுக்கத் தெரியாதவர்கள் தான் நாகரீகம் அற்றவர்கள். இவர் போன்றவர்களுக்கு மக்கள் எதிர்காலத்தில் சிறந்த பாடம் புகட்டுவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்' என்றும் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்