முஸ்லீம்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழிவகுக்கும்
(பி.எம்.எம்.ஏ.காதர்) முஸ்லீம்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து உரிமைகளைப் பெறுகின்ற சமூகமாக இந்த மண்ணிலே வாழ்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழிவகுக்குமே தவிர சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்வதைப் போல மக்களை அநாதைகளாக்குவதற்காக அல்ல.என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மருதமுனையில் கடந்த சனிக்கிழமை(25-07-2015)மாலை கிளை அலுவலகத்தைத் திறந்த வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதனைத் தெரிவித்தார். மருதமுனை வேட்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகமும் தேசியப்பட்டியல் வேட்பாளருமான வை.எல்.எஸ்.ஹமீட்.தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி மற்றும் வேட்பாளர்கள் கலரும் கலந்து கொண்டனர். இங்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில் :-அம்பாறை மாவட்டத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகை ஏனையவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. நாங்கள் வரவில்லையென்றால்தான் இந்த மாவட்ட மக்கள் அநாதைகளாக ஆக்கப்பட்டிருப்பார்கள் . அம்பாறை மாவட்டத்திலே ஸ்ரீலங்கா முஸ்...