அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் இன்று சாய்ந்தமருதில் அமைச்சர் றிஷாட் பதியூதீனால் திறந்து வைப்பு
(பி.எம்.எம்.ஏ.காதர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் இன்று மதியம் (25-07-2015)சாய்ந்தமருதில் திறந்த வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,தேசிப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்,தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கல்முனை தொகுதி முன்னாள் அமைப்பாளர் ஏ.எம்.றியாஸ் மற்றும் பத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனை ஆதரவாளர்கள் தோளில் சுமந்து வரவேற்றனர். அனைவரும் ஒன்றிணைந்து; செயலகத்தைத் திறந்து வைத்தனர்.இங்கு பெரும் தொகையான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சாய்ந்தமருது சீப்ரீஸ் விடுதியில் விசேட செய்தியாளர் மாநாடும் இடம் பெற்றது.
Comments
Post a Comment