ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நிந்தவூரில் நடை பெற்றது


நிந்தவூர் நிறோஸ் 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின்  மாவட்ட  ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று இரவு நிந்தவூரில் நடை பெற்றது.
கட்சியின்  செயலாளர் நாயகமும் ,இராஜாங்க சுகாதார அமைச்சருமான  எம்.ரீ.ஹசனலி தலைமையில்  அவரது நிந்தவூர் இல்லத்தில் நடை பெற்றது .

இவ்வொருங்கிணைப்பு  கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில்  போட்டியிடுகின்ற  வேட்பாளர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் ,எம்.சி.பைசால்காசீம், எம்.ஐ.எம்.மன்சூர்  உட்பட பிரதேச அமைப்பாளர்கள் ,மத்திய குழு உறுப்பினர்கள்  மற்றும் கட்சிப் போராளிகள்  என பலர் கலந்து கொண்டனர் .
நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.தாஹிர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை  சிறப்பம்சமாக இருந்தது.

இக்கூட்டத்தில்  தோ்தலுக்கு முன் எவ்வாறு கட்சிகளின் கூட்டங்கள் நடைபெற வேண்டும்  தலைவரின் அம்பாரை மாவட்ட பிரச்சாரங்கள் எந்த பிரதேசத்தில் அமையப் போகின்றது சிறு சிறு கூட்டங்களை கூடுதலாக ஊருக்குள்ளும் பிரதான கூட்டங்களை பிரதானமான இடங்களிலும் வைத்தும் மக்களுக்கு வேட்பாளா்களின் இலக்கங்களை தௌிவு படுத்த வீடு வீடாக செல்ல வேண்டும் என்பது பற்றியும் ஆராயப்பட்டது


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்