கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் தகவல் சேகரிப்பு - 2015


கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்று கூடல் கடந்த ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை கத்தார் டோஹாவிலுள்ள BCAS உயர் கல்வி நிலையத்தில் நடைபெற்றது. குறித்த ஒன்றுகூடல் மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாலும், எல்லோரையும் உள்ளடக்கியதாக நிகழ்வை ஏற்பாடு செய்ய போதிய இடவசதி அமையாத காரணத்தினாலும், அனைத்து கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களை இணைத்து கொள்ள முடியாமல் போனதையிட்டு வருத்தம் தெரிவிக்கின்றோம். இவ்வொன்றுகூடலின் போது கலந்துகொண்ட சகோதரர்களின் கூட்டு மஷூறாவின் நிமித்தம் கத்தார் வாழ் கல்முனை சகோதரர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதன் தேவைப்பாடு உணரப்பட்டு அதற்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் கத்தார் நாட்டில் பறந்து வாழும் கல்முனை சகோதரர்கள் அனைவரின் தரவுகளை பெற்றுக்கொள்ளும் செயற்திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே கீழுள்ள Online Form (தரவுப் படிவத்தினை) பூர்த்தி செய்வதன் மூலம் உங்களது தரவுகளையும் நீங்கள் பதிவு செய்துகொள்ள முடியும். அத்துடன் இது தொடர்பாக சக கல்முனை சகோதரர்களிடமும் தெரியப்படுத்தி அவர்களினது தரவுகளையும் உள்வாங்க எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
எதிர்கால ஒன்றுகூடலில் முடிந்தளவு அனைத்து சகோதரர்களையும் இணைத்து செயற்படுவதற்கும், பல ஆக்கபூர்வமான நகர்வுகளை எட்டவும் உங்களது இந்த தரவுகள் எமக்கு பெரும் ஆதரவாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்!
இவ்வாறு கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் தரவுகளை பெற்று முனையூர் மக்களின் ஒற்றுமையுடனும், கைகோர்ப்புடனும் கடல் கடந்து வாழும் சகோதரர்களினால் எதிர்காலத்தில் ஆக்க பூர்வமான பல விடயங்களை எம்மை புழுதி ஊட்டி வளர்த்த இம் முனையூர் மண்ணிற்கு கொண்டு செல்வதற்கு கல்முனை மண் ஈன்றெடுத்த சகோதரர்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு வேண்டிகொள்கின்றோம். வெளிநாடுகளில் வசிக்கும் கல்முனையினை சார்ந்த துடிப்புள்ள ஒவ்வொரு சகோதரர்களும் எம்முடன் இணைந்து முனையூரின் மறுமலர்ச்சியையும், கௌரவத்தையும், நிலையான மேன்மையையும் பேணும் வகையில் எம்மை புழுதி ஊட்டி வளர்த்த இம்மண்ணை தன்னிறைவடைய செய்ய ஒன்றிணைவோமாக! நன்றி!!
கீழுள்ள Link இணை  அழுத்துவதன் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற முடியும்.
இவ்வண்ணம்,
நிர்வாக கட்டமைப்பு உருவாக்கத்திற்கான குழுமம்.

Data Collection of Qatar living Kalmunai Brothers - 2015
The gathering of Qatar living Kalmunayans was held on 10th of July 2015. This meeting was organized at a very short notice with very limited fellow Kalmunai Brothers. We regret our inability due to finding more spacious place to accommodate all our brethren. Long felt need of bringing all Kalmunai Brothers living in Qatar under one umbrella was emphasized by the participants.
As an initial step on a Mashura, it was decided by body forming committee to gather and collect particular of all Kalmunai Brothers living in Qatar facilitating them to contribute to the betterment of Kalmunai in social, cultural, educational and various other fields through an organization. It is expected to render such services to Kalmunai in a more meaningful, useful and very productive ways.
Please upload your valuable information in the following URL enabling to link/bring all our Qatar living brethrens under one umbrella. We also seek your valuable cooperation and assistance by sharing this information more and more among all of our Kalmunai Brothers.
Please consult the following URL for accessing the online form;
Regards,
Body Forming Committee.


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்