கிழக்கு மாகாண கணித வினாடி வினாப் போட்டி ரத்து: குளறுபடிகள் காரணமாம்: பதில் போட்டி யூலை 30 இல்
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கடந்த மாதம் திருகோணமலையில் நடாத்திய கிழக்கு மாகாண மட்ட கணித வினாடி வினாப் போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் இவ்வறிவித்தலை வலயங்களுக்கு அறிவித்துள்ளார்.
பதில் போட்டிகள் எதிர்வரும் யூலை மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது,
மேற்படி போட்டியில் முறைகேடுகள் குழறுபடிகள் இடம்பெற்றதாகக் கூறி ஏகப்பட்ட முறைப்பாடுகள் எமக்கு கிடைத்தன. அதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணைக் குழுவொன்றை நியமித்தோம். அக்குழு ஆராய்ந்து சமர்ப்பித்த அறிக்கையின் படி அப்போட்டி ரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதன்படி அது ரத்துச் செய்யப்பட்டது.
அதற்கான பதில் போட்டிகள் இம்மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறும் என்றார்.
இதனிடையே ரத்துச் செய்யப்பட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் இம்முடிவு தொடர்பில் தமது அதிருப்தியயை வெளியிட்டுள்ளனர். சட்ட நடவடிக்கைக்கு இறங்கவிருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.
Comments
Post a Comment