அம்பாறை வயல்களில்அரக்கொட்டி தாக்கம்! விவசாயிகள் கவலை

அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட வயல் நிலங்களில் கபிலநிறத் தத்திகளின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனால் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அன்னமலை விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரி ச.சசிகரன் ஏற்பாட்டில் விவசாயிகளை தெளிவுபடுத்தும் நடமாடும் சேவை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சம்மாந்துறை வலய உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.ஏ.மஜீட், பாட விதான உத்தியோகத்தர் ஏ.ஜெய்னுலாப்டின் மற்றும் விவசாயப் போதனாசிரியர் வீ.நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளுக்கு உரிய ஆலோசனையும் வழங்கினார்கள்.


Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்