மஹிந்த ராஜபக்ஷ, நாளை சனிக்கிழமை அம்பாறைக்கு விஜயம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, நாளை சனிக்கிழமை (25) அம்பாறைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளருமான விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
நாளை (25) பிற்பகல் 3.00 மணியளவில் அம்பாறைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பும் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment