ஆசியா மன்றத்தின் கொரிய நாட்டிற்கான பிரதிநிதி பீட்டர் பெக் வியாழக்கிழமை கல்முனைக்கு விஜயம்
ஆசியா மன்றத்தின் கொரிய நாட்டிற்கான பிரதிநிதி பீட்டர் பெக் வியாழக்கிழமை கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டார். கல்முனை மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த இவர், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபை சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் கல்முனை மேயரிடம் மாநகர சபைக்காக கணனி இயந்திரமொன்றும் கல்முனையின் அபிவிருத்தி தெடர்பான நிகழ்சித்திட்டத்தின் பிரதியும் ஆசிய மன்ற பிரதிநிகளினால் கையளிக்கப்பட்டது. கல்முனை மாநகரின் புதிய நகர அபிவிருத்தி திட்டம் ஒன்றினை தயாரிப்பதற்கும் எதிர்கால அபிவிருத்திக்கு உதவுவதற்கும் ஆசிய மன்றத்தினால் இக்கலந்துரையாடலின் மூலம் உடன்பாடு காணப்பட்டுள்ளது. அத்துடன் கல்முனை மேயரை கொரிய நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பீட்டர் பெக் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.