மரத்தில் நின்றும் வெற்றிலையில் அமர்ந்தும் போட்டியிட ஸ்ரீ.மு.கா தீர்மானம்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கும் மேலும் 4
மாநகர சபைகளுக்கும் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கொழும்பு, கல்முனை, கண்டி, காலி மற்றும் நீர்கொழும்பு ஆகிய மாநகர
சபைகளுக்கு தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
பொதுச் செயலாளர் ஹசன் ஹலி தெரிவித்தார்.
ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் அரசாங்கத்துடன் இணைந்து வெற்றிலை
சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளவர்களுக்கான நேர்முகப் பரீட்சை
நிறைவடைந்துள்ள நிலையில் நாளைய தினத்திற்குள் வேட்பு மனு
தயாரிக்கப்பட்டுவிடும் என ஹசன் ஹலி தெரிவித்தார்.