கல்முனை மாநகர சபைத் தேர்தல்
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி
சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு
எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கொழும்பிலுள்ள கட்சியின் செயலகமான தாருஸ்ஸலாமில் காலை 10.00 மணி தொடக்கம் வேட்பாளர் தெரிவு நடைபெறவுள்ளதாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களையும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களையும் நேற்று சாய்ந்தமருது சுகாதார நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கல்முனை மாநகரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் மையம் ஆகையால் வேட்பாளர்கள் தெரிவில் விட்டுக் கொடுப்புடன் செயற்படுவதுடன் கட்சியின் வெற்றிக்காகவும் அனைவரும் பாடுபட முன்வர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட குழுவினரால் நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்களெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment