தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்!
தரம் ஐந்து
புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் 21 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை நடைபெறுமென பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கள
மொழிமூலம் 2 இலட்சத்து 41 ஆயிரத்து 610 பேரும்- தமிழ்மொழி மூலம் 79
ஆயிரத்து 817 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதற்கென 3721 பரீட்சை
நிலையங்களும் 506 இணைப்பு நிலையங்களும் 33 ஒருங்கிணைப்பு நிலையங்களும்
செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment