சேனைகுடிசேவோவின் மற்றுமொரு ஊக்குவிப்பு
மாவட்டப் போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெறும் நோக்கில் முன்பள்ளி மாணவர்களை ஊக்கப் படுத்த நடாத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டி கண்காட்சி ஓன்று சேனை குடி இருப்பு சேவோ நிறுவனத்தில் இன்று நடை பெற்றது .
இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு முன்பள்ளி பாடசாலைகள் தெரிவு செயபபட்டு அப்பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி நடை பெற்றது.
சேனைகுடி சேவோ நிறுவனத்தின் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் நடை பெற்ற இக்கண்காட்சியில் கல்முனை வலயக்கல்வி அலுவலக முறை சாரா உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.சக்கப், சேனைக் குடி கணேசா மகா விய்ஹியாலய அதிபர் கே.சந்திர லிங்கம் ஆகியோர் அதிதிகளாகவும் நடுவர்கலாகவும்.கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
இக்கண்காட்சியில் தெரிவு செயப்பட்ட நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாடசாலை ,சேனை குடி விபுலானந்தா பாலர் பாடசாலை ,மத்திய முகாம் ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன .
Comments
Post a Comment