மர்ஹ'ம் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று


கல்முனை உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஒரு அணிக்கு ஏழுபேர் கொண்ட 'நொக் அவுட்' முறையிலான மர்ஹ'ம் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களைச் சேர்ந்த 15 கழகங்கள் கலந்து கொண்ட இச்சுற்றுப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினரை எதிர்த்து மருதமுனை சமர் அணியினர் மோதிக் கொண்டனர்.


இச்சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற மூன்றாம் தர அணியினரை தெரிவு செய்யும் அணிகளுக்கிடையிலான போட்டியும் இம்மைதாணத்திலே இடம் பெற்றது. மருதமுனை ஆசனல் அணியினரை எதிர்த்து அக்கறைப்பற்று எம். சீ. யூத்ஸ் அணியினர் மோதி 05 - 01 என்ற ரீதியில் அக்கறைப்பற்று எம். சீ. யூத்ஸ் அணியினர் மூன்றாம் தரத்திற்கு தெரிவாகினர்

இறுதியாக நடைபெற்ற வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினரை எதிர்த்து மருதமுனை சமர் அணியினர்களுக்கிடையிலான போட்டியில் வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினர் 02- 01 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி சம்பியனானது.

கல்முனை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் கொழும்பு தலைமைக் காரியாலய சட்டப்பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எம்.ஏ.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் றஸாக் (ஜவாத்) பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ஏ.ஏ. பஸீர்இ மர்ஹ'ம் பழீல் சேரின் புதல்வர் பழீல் நிகாப்இ மற்றும் அம்பாறை மாவட்ட கால்நடை வைத்தியர் எம்.சீ. முஹம்மட் யுனைட் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டதோடு ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி பாராளுமன்ற அலுவல்கள் பிரிவின் மொழி பெயர்ப்பாளர் லெப்டினன் கே.எம். தமீம் ஆகீயோர் சிறப்பு அதிதிகலாகவும் கலந்து சிறப்பித்தனர்.








Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்