ஸ்ரீ.மு.கா இன்று தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஸ்ரீ.மு.கா இன்று தேர்தல் தொடர்பில் தீர்மானம்



நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆளும்கட்சியுடன் இணைந்தா அல்லது தனித்தா போட்டியிடுவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று தீர்மானம் எடுக்கவுள்ளது.

இது தொடர்பில் அரச தரப்பினருடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி எமக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைகளில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் முன்னதாகவே தெரிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிட்டு பின்பு அரச தரப்புடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு