23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்தது
23 உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படும் வரை அவைகளுக்கான அதிகாரங்கள் விசேட உத்தியோகத்தரினால் நிர்வகிக்கப்படுமென உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க தெரிவித்தார். உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள 17 மாநகர சபைகள், 5 நகர சபைகள் மற்றும் பிரதேச சபை ஒன்று ஆகியவற்றின் பதவிக்காலம் செவ்வாய் நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்களின் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேற்படி சபைகளுக்கு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment