Posts

Showing posts with the label Politics

முஸ்லிம் காங்கிரஸின் பலவீனம் இந்த அரசாங்கத்தின் அங்கமாக இருப்பது தான்

Image
- மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்;டிக்கொண்ட போதிலும், தனித்துப் போட்டியிடும் முடிவை தாம் திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டதாக என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொழும்பு 15, ஹேனமுல்லை முகாம் பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.  கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நைஸர் ஆகியோரும் உரையாற்றினர். கொழும்பு மாநகர உறுப்பினர் அனஸூம் அதில் பங்குபற்றினார்.  அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்ததாவது,  நான் கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது பாரிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்த வேளையில் இந்த ஹேனமுல்லை கேம்ப் பிரதேசத்திலிருந்து வந்த இளைஞர்கள் என்னைச் சுற்றி ஓர் அரணாக நின்று உரிய பாதுக

நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தஜாப்தீன் விடயத்தில் நீதி அமைச்சர் நீதம் பேணுவாரா ?

Image
யு.எம்.இஸ்ஹாக் நாவிதன்வெளி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.தஜாப்தீன் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த  செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரஊப்ஹக்கீம் மத்தியமுகாமில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கட்சியின் தலைவர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் வேண்டிக்கொண்டதையும் பொருட்படுத்தாது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே இவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இதுவிடயமாக சம்மந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அடுத்துவரும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் ரஊப்ஹக்கீம் மேலும் காட்டமாக தெரிவித்தார். இந்த அறிவிப்பை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என நாவிதன்வெளி பிரதேச பெரும்பாலான முஸ்லிம் மக்கள்  த

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்; வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றம்!

Image
கல்முனை மாநகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களின் முழு ஆதரவோடு அங்கீகரிக்கப்பட்டது. கல்முனை மாநகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரினால் இன்று மாலை சமர்ப்பிக்கப்பட்ட போது சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், பிரதி மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப், ஏ.ஆர்.அமீர், ஏ.எம்.றகீப், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர்அலி, ஏ.ஏ.பஸீர், ஏ. நஸார்தீன், ஏ.எம்.பறக்கத்துல்லாஹ், எம்.ஐ.பிர்தௌஸ், எம்.எல்.சாலித்தீன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஸீ.எம்.முபீத், .இஸட்.ஏ.றஹ்மான், தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், ஏ.விஜயரெட்னம், எஸ்.ஜெயகுமார், ஜீ.கமலதாஸன் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான ஏ.எச்.எச்.எம். நபார் ஆகிய மொத்த உறுப்பினர்கள்  பிரசன்னமாயிருந்தனர். வரவு செலவு திட்ட விவாதத்தை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதி முதல்வர் சிர

கல்முனை விகாராதிபதி சங்கரத்ன தேரருடன் ஹரீஸ் சந்திப்பு!

Image
கல்முனை தமிழ் உப பிரதேச செயலக விடயம் தொடர்பாகவும் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் நிலை தொடர்பாகவும் பாராளுமன்ற உருப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளார். இச்சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிக் குழுச் செயலாளருமான ஏ.எம் பறக்கத்துல்லாவும் கலந்து கொண்டார்.

கல்முனை மாநகர சபை சர்ச்சை: அமைச்சர் ஹக்கீம் தலைமையில் விசேட கூட்டம்

Image
  சபை அமர்விலும் ஹக்கீம் பங்கேற்பார்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ரவூப் ஹக்கீம் தலைமையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சர்ச்சை கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையிலேயே சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதில் கல்முனை மேயராக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் கல்முனை மாநகர சபைக்கான 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் கடந்த திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும் இந்த வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில மாநகர சபை உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதனால் கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை வரை ஒத்த

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா!

Image
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா தனது பதவியை இராஜினாமா செய்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உப தலைவருமான பொன்.செல்வராசா ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.  இது தொடர்பில் தவிசாளர் செல்லையா இராசையா அனுப்பியுள்ள கடிதத்தில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராகிய நான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு அதிகபடியான வாக்குகளைப்பெற்று தவிசாளராக நியமிக்கப்பட்டேன்.  இந்த நிலையில் பிரதேசசபையில் உள்ள ஏனைய மூன்று உறுப்பினர்களும், சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தரமால் தொடர்ந்து குழப்ப நிலைகளை ஏற்படுத்திவருகின்றனர் எனவே இது தொடர்பில் கடந்த காலத்தில் பல தடவைகள் எமது கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டுசென்ற போதிலும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே தொடர்ந்து செயற்பட முடியாத நிலையில் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன். எனினும் கட்சி

காரைதீவு பிரதேச சபையின் பட்ஜட் மீண்டும் தோற்கடிப்பு

தவிசாளரின் தன்னிச்சை போக்கை எதிர்த்தே வாக்களித்ததாக உறுப்பினர்கள் தெரிவிப்பு காரைதீவு பிரதேச சபையின் வரவு, செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பிரதேச சபை, தமிழ்த் தேசி யக் கூட்டமைப் பின் ஆளுகைக் குட்பட்டது. இந்த சபையில் அங்கம் வகிக்கும் 5 உறுப்பினர்களில் நால்வர் எதிர்த்து வாக்களித்துள்ளனர். காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த 18 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப் பட்டபோது தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து இரண்டாவது தடவை யாகவும் நேற்று சபையில் சமர்ப்பிக்கப் பட்டபோது ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதாவது, சபையின் தவிசாளரைத் தவிர சகல உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். தவிசாளரின் தன்னிச்சையான போக்குக்கு எதிராகவே தாங்கள் எதிர்த்து வாக்களித் துள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்கான அமர்வு நேற்று தவிசாளர் செ. இராசையா தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு தவிசா

அக்கரைப்பற்று மாநகர சபையின் பஜ்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Image
தேசிய காங்கிரஸின் ஆளுகையின் கீழ் உள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்குரிய பஜ்ஜெட் அதிகப்படியான உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று(24.12.2013) காலை மேயர் அஹமட் ஸக்கி அதாவுல்லாவின் தலைமையில் கூடிய மாநகர சபை அமர்வின்போது; 2014ஆம் ஆண்டுக்குரிய பஜ்ஜெட் அறிக்கை வாசிக்கப்பட்டு அது வாக்கெடுப்பக்கு விடப்பட்டது. இதற்கு தேசிய காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தன் மூலம் பஜஜெட் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஒரேயொரு எதிர்கட்சி உறுப்பினரான முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த மௌலவி ஹனிபா மதனி சபைக்கு இன்று வருகை தராமை  குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமோக ஆதரவுடன் அக்கரைப்பற்று மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்குரிய பஜ்ஜெட் நிறைவேற்றப்பட்டது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேயர் ஸக்கி அதாவுல்லா, 'மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு மகாநகர சபைக்குட்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் எவ்வித வேறுபாடுகளுமின்றி நடைபெறுகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் நலன்களில் அக்கறைகாட்டி வருகிறார்கள். அவர்களின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள

கல்முனையில் முதல்வர் பிரதி முதல்வர் திருவிளையாடல்

Image
கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதி முதல்வரல்ல, முதல்வராக சொல்லப்படும் நிசாம் காரியப்பர் பதில் முதல்வரே தவிர அவரும் முதல்வரல்ல என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சிராஸ் மீராசாஹிபின் பெயர் கல்முனை பிரதி முதல்வராக இன்று  வரையிலும் தேர்தல்கள் ஆணையாளரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. கல்முனை முதல்வராக செயற்பட்ட சிராஸ் மீராசாஹிப் கடந்த நவம்பர் மாதம் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார்.  இதன் காரணமாக ஏற்பட்ட முதல்வர் வெற்றிடத்திற்கு பிரதி முதல்வரான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதில் முதல்வராக நியமிக்கட்டு தற்போது செயற்படுகின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் பெயரை முதல்வராக சிபாரிசு செய்து தேர்தல்கள் செயலகத்துக்கு அறிவித்துள்ளது. எனினும், சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கல்முனை முதல்வர் என இன்று திங்கட்கிழமை வரையிலும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. இதனால் கல்முனை பிரதி முதல்வரான நிசாம் காரியப்பர் பதில் முதல்வராகவே தற்போ

கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்

Image
கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களில் சிலர் கருத்து முரண்பாடுகளுடன் செயற்பட்டமை  கவலையையும், அதிர்ச்சியையும் தருவதாக உள்ளது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது... ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆளும்  கட்சியாகவும், அதிக முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.  தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என  நினைத்து செயற்பட்டதானது வியக்கத்தக்க விடயமல்ல.  கடந்த முதல்வர்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்ற வகையில் தமிழ் தேசிய  கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு ஊடாக தமிழ் மக்களுக்குரிய  அபிவிருத்திகளையும், அவர்களது பகுதிகளுக்குரிய அதிகாரத்தினையும்  வழங்கியுள்ளார்கள். இதற்கு பகரமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்  முதல்வர்களுக்கு முழு ஆதரவினையும் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று காலை வரை வாக்கள

கல்முனை மாநகர சபையில் பஜட் அமளி

Image
இன்று 23-12-2013  நடைபெற இருந்த கல்முனை மாநகர சபைக்கூட்டம் திடீர் என்று ஒத்திவைக்கப்பட்டதை ஆட்சேபித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இணைந்து மாநகர சபை சபா மண்டபத்துக்கு முன்னால்  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்று கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்தது.கூட் டம் பி.ப 2.30மணிக்கும் ஆரம்பமாகம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்  உறுப்பினர்கள்  கூட்டத்துக்கு வந்ததன்  பின்னர் திடிரென கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பிர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது .இதனை  கண்டித்து  இவர்கள் கோசமிட்டதுடன் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவின் பிரதிகளைக்கிழித்தெறிந்தனர்.  இன்று சமர்ப்பிக்கப்படயிருந்த வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும் என்று பயந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இவர்கள் குற்றம்சுமத்தினர்.அத்துடன்.நி லைமையை பொலிஸார் தலையிட்டு கட்டுப்படித்தியத்துடன் முதல்வர் நிஸாம் காரியப்பர்  மாநகர சபைக்கூட்ட மண்டபதின்  முன்னால் வந்து கூட்டம் ஒரு கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  ஆணையாளருக்கு உத்தரவு பிறப்ப

நாவிதன்வெளி பிர தேச சபையில் வரவு செலவு திட்ட அறிக்கை தோற்கடிக்கப் பட்டுள்ளது

Image
யு.எம்.இஸ்ஹாக் நாவிதன்வெளி பிர  தேச சபையில் இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தோற்கடிக்கப் பட்டுள்ளது.  பிர தேச சபை தவிசாளர் எஸ்.குணரட்ணம் தலைமையில்  நேற்று வரவு செலவு திட்ட அறிக்கை முன்மொழியப்பட்டது, வரவு செலவு திட்ட அறிக்கைக்கு எதிராக அம்பாறை  மாவட்டத்தில் தமிழ் தேசிய   கூட்டமைப்பின்  கட்டுப்பாட்டில் இருந்த மற்றுமொரு சபை தோற்கடிக்கப் பட்டுள்ளது .இந்த வரவு செலவு திட்ட அறிக்கைக்கு எதிராக  தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஆனந்தன் உட்பட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் தமிழ் மக்கள்  புலிகள் கட்சி உறுப்பினர் நால்வருமே எதிர்த்து  வாக்களித்துள்ளனர் நான்குபேரும் ஆதரவாக 03  பேரும்  வாக்களித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குக்களால் நிறைவேற்றம்!

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 60 வாக்குக்கள் அளிக்கப்பட்டதன் மூலம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வாக்களித்திருந்தன.

கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும் இடையிலான கலந்துரையாடல்

Image
கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு  வெள்ளிக்கிழமை மாலை இந்திய  தூதுவராலயத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலில் துணை உயர்ஸ்தானிகர் கல்முனை நூலக அபிவிருத்தி, சுமார் 250மில்லியன் பெருமைதியான திண்மக்கழிவு அகற்றல் முகமைத்துவ வேலைத்திட்டம் மற்றும் அதனூடான மின்னுற்பத்தி போன்றவற்றை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பரினால் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனை கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதேவேளை இந்திய துணை உயர்ஸ்தானிகரால் இந்தியாவின் கேரளா உள்ளூராட்சி அதிகார நிறுவத்தின்ஊடாக ( KILA )  கேரளாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு தொடர்பான கற்கை நெறியினை பயில்வதற்காக கல்முனை மாநகர சபை உறுப்பினர் குழுவினை வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். இக் கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவரும்மான  ஏ.எம். ஜெமீல், ஸ்ரீ.ல.மு.கா.அம்பாறை மா

நிந்தவூர் பிரதேச சபை வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

Image
நிந்தவூர் பிரதேச சபை இன்று காலை 10.15 மணியளவில் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் கூடியது. இன்றைய அமர்வின் போது தவிசாளர் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தினை சபையில் சமர்ப்பித்தார். இதன் போது வரவு-செலவு திட்டம் பற்றி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.  உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி கருத்துத் தெரிவிக்கையில் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கு நான் ஆதரவுமில்லை. எதிர்ப்புமில்லை. எனத் தெரிவித்தார். தான் நடுநிலைமை வகிப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து வரவு-செலவு திட்டம் ஏனைய உறுப்பினர்களின் அங்கிகாரத்துடன் நிறைவேற்றப்பட்டது.  இன்றைய சபை அமர்வுக்கு உதவித் தவிசாளர் எம்.எம்.அன்ஸார் சமூகமளிக்கவில்லை.

இந்திய உதவி தூதுவர் திரு. குமரன்அவர்களைகல்முனை மாநகர சபை முதல்வர் எம்.நிசாம் காரியப்பர் தலைமையில் சந்திக்க ஏற்பாடு

Image
கல்முனை மாநகர சபை முதல்வர் எம்.நிசாம் காரியப்பர்   தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ,  கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் ,  ஏ.ஏ.பஷீர் ,  ஏ.எல்.எம். முஸ்தபா , எம்.எல்.சாலிதீன் ,  ஏ.எம்.ரியாஸ் ,  ஏ. அமிர்தலிங்கம் மற்றும் ஆணையாளர் ஜே ,  லியாக்கத் அலி ஆகியோர் கள்  இந்திய உதவி  தூதுவர்  திரு. குமரன் அவர்களை இந்திய தூதுவர் காரியாலயத்தில் நாளை  29.11.2013 வெள்ளிக்கிழமை மாலை  4.30  மணிக்கு  மாநகர சபை அபிவிருத்தி விடயமாகவும் கல்முனை மாநகர சபையையும் சென்னை மாநகராட்சி சபையையும் இணைத்து நிருவாக கட்டமைப்பு விடயமாக பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாலருமான ஏ.எம். பரக்கத்துல்லாஹ் தெரிவித்தார்.  

முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்

Image
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர முதல்வரும்மான சட்டமுதுமாணி எம். நிசாம் காரியப்பர் அவர்களுக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும் ஞாயிகிழமை பி.ப. 4.30 மணிக்கு கல்முனை நகர மண்டபத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான சட்டமுதுமாணி  மாண்புமிகு ரஊப் ஹக்கீம் ,கெளரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும், சிறப்பு அதிதிகளாக மாகாண சபை அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், பிரதேச சபை தவிசாளர்களும், விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கல்முனை மாநகர புதிய முதல்வருக்கு வரவேற்பு

Image
கல்முனை முதல்வராக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியு மான நிசாம் காரியப்பர் எதிர்வரும் திங்கட்கிழமை (18.11.2013) காலை 9 மணிக்கு கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் தனது கடமையை பொறுப் பேற்கவுள்ளார். இந்நிகழ்வில் புதிய முதல்வரை கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து மாநகர சபைவரை வரவேற்று அழைத்துச்செல்லப்படவுள்ளார். இவ்வரவேற்பினை பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள், வர்த்தக சமூகங்கள், விளையாட்டு கழகங்கள், பொது அமைப்புக்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதே வேளை  எதிர்வரும் 24ஆம் திகதி  கல்முனை பிரதான வீதியில்  பெறவுள்ளது  இக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கலந்து கொள்ளவுள்ளார் . மறு தினம் 25ஆந்  திகதி கல்முனை மாநகர சபையின் ஐந்தாவது   முதல்வர் தலைமயிலான  முதலாவது அமர்வு இடம் பெறவுள்ளது. 

அரசியலும் – இலக்கியமும்

Image
ஏ.எம்.பறகதுல்லா  அரசியல் ஒரு சாக்கடை என்றும் அரசியல் வாதிகள் தவறிழைப்பவர்கள் என்றும் எதிலுமே தொடர்புபடாத சிலர் பேசுவதுண்டு. தேர்தல் காலங்களில் வேட்பாளர்களுக்குள்ளும் ஆதவளர்களுக்குள்ளும் மோதல்கள் வருவது ஒரு சாதரணமாகவே கருதப்படுகின்றது. தேர்தலுக்கு பின்னர் அவர்கள் ஒன்றிணைந்து விடுவதும் பழகிப்போன விடயமாக இருக்கிறது. வேறுபட்ட கட்சி பிரதிநிகள் பொது சபைகளில் ஓன்று கூடும்பொது அவர்களுக்குள் சில வேளைகளில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டும் ஒருவரை மற்றொருவர் தாக்கியும் பேசுவது பழகிப்போன விடயமே எனலாம்.   இன்னும் சந்திகளிலும் ,  கடைகளிளலும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் சிலர் யாராவது ஒரு அரசியல்வாதியின் பெயரை உச்சரித்து அவரை தாறுமாறாக விமர்சிப்பதையும் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் அவர்களால் விமர்சிக்கப்படும் குறித்த அரசியல்வாதியினை நேரில் காணும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவருடன் கைகுலுக்கவும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவும் முந்திக்கொள்வதையும் பல தடவைகளில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.   மிக நீண்ட காலமாக இலக்கியத்துறை சார்ந்த எழுத்தாளர் நண்பர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்திருக்

கல்முனை மாநகர முதல்வர் நன்றிப்பூக்கள்

Image
கல்முனை மாநகர சபை முதல்வராக நான் பதவி வகித்த காலப்பகுதியில் என்னோடு கைகோர்த்து ஒத்தாசை புரிந்த சகலருக்கும் விஷேடமாக என்னை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகுபார்த்த எனது ஆதரவாளர்களுக்கும் நன்றிப்பூக்களை சொரிகின்றேன் என முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். கல்முனை மாநகர முதல்வராக இரண்டு வருடங்கள் கடமையாற்றி இருக்கின்றேன். இக்காலப்பகுதியில் என்னோடு இணைந்து அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய கல்முனை மாநகர சபையின் ஆணையாளர், பொறியியலாளர், கணக்காளர், செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், அதேபோன்று மாநகர சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாங்கள் எல்லோருமாகச் சேர்ந்து என்னால் முடியுமானவரை இம்மாநகர வாழ் மக்களுக்காக பல்வேறுபட்ட சேவைகளை ஆற்றி இருக்கின்றோம். இது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெட்டத் தெளிவான விடயமாகும். இன்று (08.11.2013) நான் உத்தியோக பூர்வமாக கல்முனை மாநகர முதல்வர் பதவியினை இராஜினாமா செய்திருக்கின்றேன். கட்சியினுடைய நலனுக்காகவும் மக்களுடைய நலனுக்காகவும் இந்த அதிரடி ம