கல்முனை மாநகர சபையில் 16 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
கல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாக கடமையாற்றிய 16 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது. கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, மாநகர சபை பொறியியலாளர் ஏ.ஜே.ஜௌசி, மாநகர சபை கணக்காளர் எல்.ரீ .சாலித்தீன், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பறக்கத்துள்ளா, ஏ.எம்.பிர்தௌவ்ஸ், ஏ.ஆர் அமீர் உட்பட மாநகர சபை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது, 16 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.