மக்கள் பிரதிநிதிகளுக்கு உலமா சபை பாராட்டு
சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்ளை கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாய்ந்தமருது - மாளிகைக்கா உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் என்.எம்.ஏ.முஜீப் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்ஹரீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து கல்முனை மாநகர சபைக்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட ஏ.ஏம்.பசீர், ஏ.எம்.பிர்தௌஸ், ஏ.நசார்டீன் மற்றும் காரைதீவு பிரதேச சபைக்கு உறுப்பினராக மாளிகைகாடு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஏ.பாயிஸ் ஆகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment