காத்தான்குடி பிரதானவீதியில் பாரிய விபத்து
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்திற்கு முன்னால் இடம் பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் கணவன் மனைவி குழந்தை ஆகியோர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7.25 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரிய கனரக லொறியொன்றின் பின்னால் மோதியபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற காரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறித்த காரின் சாரதி தூக்கத்திலிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.(நன்றி :காத்தான்குடி இன்போ )
Comments
Post a Comment