இலங்கைக்குஅமெரிக்க புதிய தூதுவராகமிஷேல் சிஸன்
இலங்கைக்கும் மாலைதீவுக்குமான புதிய தூதுவராக வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்த இராஜதந்திரியான மிஷேல் சிஸன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுச் சேவையில் சிரேஷ்ட நிலையிலுள்ள இவர்- பக்தாத்தில் சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தூதுக்குழுவின் உதவித் தலைவராக இதுவரை கடமையாற்றியவர் ஆவார்.
இலங்கைக்கான தூதுவராக சிஸன் ஈராக்கிற்கான தூதுவராக பிரெட் மக்கேக் ஆகியோரின் நியமனங்களை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா- 'தமது புதிய பதவிகளில் இவர்கள் வழங்கவுள்ள நிபுணத்துவ சேவையினால் எமது நாடு பெரும் நன்மையடையும்' என கூறினார்
Comments
Post a Comment