ஜெனீவா தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை!


அமைச்சர் மஹிந்த சமரசிங்க.

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிய வேண்டாமென இந்தப் பிரேரணையை முன்வைத்த நாடுகளுக்கே கூறினேன். சர்வதேச சமூகம் சில நாடுகள் விடயத்தில் இரட்டை வேடம் பூணுகிறது.

மனித உரிமை பேரவையின் வருடாந்த மீளாய்வு கூட்டம் ஒக்டோபரில் நடைபெற உள்ளது. இதில் எமது நல்லிணக்க செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து நாமாக தெளிவுபடுத்துவோம். இது புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் நாம் எமது செயற்பாடுகளின் முன்னேற்றத்தை விளக்கியுள்ளோம்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

ஒரு சில அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது. நல்லிணக்கம் ஏற்படுத்தும் செயற்பாட்டில் சர்வதேச சமூகம் தேவையற்ற தலையீடு செய்துள்ளது. நல்லிணக்கம் ஏற்படுத்த தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள குறைபாடுகள் குறித்து நாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் .

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டை 23 நாடுகள் கொண்டிருந்தன. 30 வருட யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அநேக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இலங்கை குறித்து அவை தமது நம்பிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இலங்கை செயற்படும். எமக்கு ஆதரவாக வாக்களித்த அரபு ஆபிரிக்க ஆசிய நாடுகளுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா .

நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கைக்கும் ஜெனீவா மாநாட்டிற்கும் முன்பாகவே இலங்கை அரசாங்கம் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது. அந்த நடவடிக்கை தொடரும். அதிலுள்ள விடயங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவிலும் அமெரிக்க பிரேரணையிலும் உள்ளது. மக்களை இலக்காகக் கொண்ட எமது கொள்கை தொடரும் என்றார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்