கல்முனை அபிவிருத்தியில் பின் நோக்கி நிற்கின்றது என்று யாரும் குறிப்பிட முடியாது



ஹரீஸ் எம்.பீ 
கல்முனை மாநகரின் வர்த்தக அடையாளம் இந்த நாட்டின் வரலாற்றோடு மிகவும் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். எமது பிரதேசம் அபிவிருத்தியில் பின் நோக்கி நிற்கின்றது என்று யாரும் குறிப்பிட முடியாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த மாநாடு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்; 'அபிவிருத்தி என்ற போட்டியில் எமது கல்முனை முதலாவது, இரண்டாம் ஸ்தானங்களைப் பெற்ற சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. அதனால் தற்போது நாங்கள் அபிவிருத்தியில் 2ம் ஸ்தானத்தில் உள்ளோம் என்ற மனப்பாண்மையில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

மறைந்த தலைவர் இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் பல திருப்பு முனைகளைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை வகுத்திருந்தார். அவரது தூர நோக்கு சிந்தனையால் அப்போதே சுகாதாரத்துறை அபிவிருத்தி கண்டது. முழு அம்பாறை மாவட்டத்திலும் ஒரு விசேட வைத்திய நிபுணர் இல்லாத கால கட்டம் இருந்தது. அப்போதுதான் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை என்று உருவாகி வளாச்சியடைந்தபோது, அதில் ஒரு போட்டி உருவாகியது.

கல்முனையில் சகல வசதிகளும் கொண்ட வைத்திசாலை தேவைப்படுகின்றது என்பதற்காக ஏனைய பிரதேசங்களும் அதை தமது பிரதேசத்தின வளர்சிக்கான ஆயுதமாக எடுத்துக் கொண்டது. இதன் விளைவாக இன்று சுகாதாரத் துறையில் அம்பாறை மாவட்டம் பெருமளவு தன்னிறைவு கண்டிருக்கின்றது.

அக்கரைப்பற்று வைத்தியசாலை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, அதுபோல் அம்பாறை, சம்மாந்துறை என்று நாம் வியாபித்த சுகாதாரத் துறையை கண்டுகொள்ள முடிகிறது. இதன் பின்பு மாநகர உட்கட்டமைப்பு போட்டி என்று பல்வேறு போட்டிகள் இங்கு இடம்பெற்றதே தவிர அபிவருத்தி இடம்பெறவில்லை என்று யாரும் கூறிவிட முடியாது.

இந்த பிராந்தியத்தில் கல்லோயா விவசாயத் திட்டம் வந்த பின்பு எமது பிரதேச மக்கள் விவசாயத் துறையில் முன்னேறி இலங்கையின் விவசாயத்துறையின் முதுகெலும்பாக மாறிய வரலாறு இருந்தது. அதனை ஒட்டியதாக கைத்தொழில் துறை வளர்ச்சி கண்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவுக்கு அடுத்ததாக இன்று கல்முனை நகைத்துறை உற்பத்தி தொழிற்சாலைகள் மிகப் பிரபல்யமடைந்து வருகிறது. இந்த வர்த்தக மையம் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதே எமது அவாவாகும். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நாம் சகல வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்த முனைகின்றோம்.

இவ்வாறு அபிவிருத்திப் போட்டி எமது பிரதேசத்தில் காணப்பட்டதனால் முழு அம்பாறை மாவட்டமும் பல்வேறு துறைகளில் அபிவிருத்தி கண்டு வந்துள்ளது. எதிர்வரும் காலங்களிலும் அவ்வாறான அபிவிருத்திகள் எமக்கு கிடைக்க இருக்கின்றது.

இந்த வருட அபிவிருத்தி பிரதேசமாக அம்பாறை மாவட்டம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடீப்படையாகக் கொண்டு தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை இவ்வருடம் அம்பறை மாவட்டத்தில் நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பாரிய அபிவிருத்திகள் நடைபெறவுள்ளது. இவ் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எமது பிரதேசத்தின் வர்த்தகத் துறையின் அபிவிருத்திக்கான முன் மொழிவுகளைச் செய்ய எண்ணியுள்ளேன்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது