கல்முனை குடியை சேர்ந்த சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் அப்துல் கபூர்காலமானார்

சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் ஏ.எல்.எம்.அப்துல் கபூர் இலங்கை நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நெதர்லாந்தில் காலமானார். 

கல்முனையை சேர்ந்த இவர், கொழும்பு மார்கா ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியும் நெதர்லாந்து துறைசார் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவரும், நெதர்லாந்து பல்கலைக்கழகமொன்றின் விரிவுரையாளருமாக கடமையாற்றியுள்ளார்.

நெதர்லாந்து - கல்முனை நட்புறவு அமைப்பின் தலைவராகவும் கல்முனை கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டு ஸ்தாபனத்தின் சிரேஸ்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரவியல் துறையில் பட்டம் பெற்றது முதல் விரிவுரையாளராக தனது பணியை ஆரம்பித்த இவர் இத்துறையில் பல நூல்களையும் எழுதியுள்ளார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இலங்கை நேரப்படி நாளை வியாழக்கிழமை காலை நெதர்லாந்தில் நல்லடக்கம் செய்யப்படும் 


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்