கல்முனை அபிவிருத்திக்கு நாம் ஒரு போதும் தடையல்ல
ஜவாத் , ஜெமீல் அறிவிப்பு கல்முனை மாநகர அபிவிருத்திக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் 350 மில்லியன் ரூபா ஒதுக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார். "நான் அறிந்த வரையில் ஆளுநரிடம் 350 மில்லியன் ரூபா செலவு செய்யுமளவுக்கு பணமில்லை. அப்படியான அபிவிருத்தி வேலைகளை செய்வதாயின் கிழக்கு மாகாண சபையின் நிதியிலிருந்து பெற்று தான் செய்ய வேண்டும்" என அவர் குறிப்பிட்டார். "அவ்வாறு மேற்கொள்வதாயின் மாகாண சபையின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே மேற்கொள்ள முடியும். ஆனால் இவ்வாறான எந்த நிதியும் கிழக்கு மாகாண சபையிலிருந்து கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்படவில்லை" எனவும் ஜவாத் தெரிவித்தார். கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம பெப்ரவரி 21ஆம் திகதி கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார். இந்த விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்....