அரசியல் நோக்கமே மாநகர சபை உறுப்பினர் முபீதின் அறிக்கை என செய்தியாளர்களிடம் தெரிவிப்பு

இந்த சந்திப்பில் மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.ரகீப்,ஏ.எம்.பரகத் ,எம்.எல்.சாலிதீன்,ஏ.ஆர்.அமீர்,எஸ்.ஏ.பிர்தௌஸ் ,மற்றும் உமர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்
உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் அங்கு கருது தெரிவிக்கையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத் தெரிவித்திருக்கும் கருத்து அவரது அரசியல் நோக்கத்துக்காக சொல்லப் பட்டவையாகும் .
கல்முனைக்கு வருகை தரவிருந்த கிழக்கு மகான ஆளுநரின் வருகை பிற்போடப்பட்டமயானது கல்முனை பிரதேசத்தில் இன நல்லுறவுடனான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கமாகும் . கல்முனைக்கு வருகை தரவிருந்த ஆளுநர் 350 மில்லியன் ரூபாவை தரவிருந்ததாக எவரிடமும் தெரிவிக்கவில்லை அவ்வாறான நிலையில் ஆளுநர் இந்த கருத்தை யாரிடம்,எங்கு தெரிவித்தார் என்பதை உறுப்பினர் முபீத் தெளிவு படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அங்கு ஊடகவியலாளர்களால் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு உறுப்பினர் பரகத்,சாலிதீன் ஆகியோரினாலும் கருத்து கூறப் பட்டது.
Comments
Post a Comment