மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் புரியச் செல்பவர்களுக்கு இலவச மொபிடெல் 'சிம்"!
மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்லும் ஒருவருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று மொபிடெல் 'சிம்" அட்டையொன்றைப் பரிசளித்தார்.
ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரியச் செல்லும் மற்றும் ஒருவருக்கு இந்த "சிம்" அட்டையை வழங்கினார்.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்பவர்களுக்கும்- அங்கு தொழில் புரிந்துவிட்டு தாய்நாடு திரும்புபவர்களுக்கும் மொபிடெல் நிறுவனம் இலவச 'சிம்" அட்டைகளை விநியோகிக்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியூள்ளமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment