பன்னாட்டு அரச பிரதிநிதிகளோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!


ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பன்னாட்டு அரச பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றார்.
தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது அமைதி சமாதானம் அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்றும் இவைகளை விரைவாக அடைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் நாம் அரசாங்கத்துடன் மட்டுமே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதோடு அரசாங்கத்துடன் பகமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக எதையும் நாம் சாதிக்க முடியாது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.



அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்  அமைச்சர்களில் ஒருவராக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தலைவர் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தான் கலந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது