இந்தியாவில் கரை ஒதுங்கிய கல்முனை மீனவர்கள் நாடு திரும்பி உள்ளனர்


 தென் இந்திய மீனவர் சமூகத்தினரால் காப்பற்றப்பட்ட கல்முனையை சேர்ந்த நான்கு மீனவர்கள் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பினர்.
இம்  மீனவர்கள் கடந்த  15 நாட்கள் இந்திய கடற் பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த போது, ரோலரில் வந்த இந்திய மீனவர்கள் கைப்பற்றி கன்னியாகுமரி கடல் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

மிகவும் பலவீனமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மீனவர்களை தமிழ் நாடு பொலிஸார் பாராமரிப்புக்காக அருட் தந்தை ஜே.சேர்ச்சிலிடம் ஒப்படைத்தனர்.
கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மேற்கொண்ட முயற்சியனால் மீன்பிடி அமைச்சர் ராஜித சேநாயக்க, சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் ஆகியயோரின் உதவியுடனேயே இவர் இலங்கை திரும்பியுள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்த நான்கு மீனவர்களையும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர் வரவேற்றனர்.
கல்முனை பிரதேசத்தை சேர்நத அப்துல் றஹீம், இஸ்மாயில் இஸ்மாலெப்பை, எம்.பிச்சி நயிஷ் மற்றும் எம்.ஹசன் பசீர் ஆகியோரே மீட்கப்பட்டவர்களாவர். 



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது